சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?

ஜூலை 01-15

கேலிச் சித்திரத்தை கேலிச் சித்திரமாகப் பார்க்க வேண்டும்; கோலிக் குண்டை கோலிக் குண்டாகப் பார்க்க வேண்டும்! என்றெல்லாம் கருத்துச் சுதந்திர வியாக்யானம் பேசுகிறார்கள் சோ கும்பலும் அறிவு ஜீவிகளும்!

அம்பேத்கரை இழிவுபடுத்தியும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இழிவுபடுத்தியும் ழிசிணிஸிஜி பாட நூலில் வெளிவந்த கார்ட்டூன்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில்தான் இவர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், சகிப்புத் தன்மையும் நினைவுக்கு வரும்!

கேலிச் சித்திரத்துக்கெல்லாம் கொந்தளித்திருந்தால் துக்ளக், தினமலர் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகள் முதல் இந்திய தேசிய ஏடுகள் வரை இவற்றின் அலுவலகங்கள் எல்லாம் செங்கல் செங்கலாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதைய பிரச்சினை கேலிச் சித்திரம் பற்றியதல்ல! அதைப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது பற்றித்தான்.

எவ்வித வாய்ப்பும் இன்றி வரலாற்றை வரலாறாகத் தர வேண்டிய பாட நூல்களில் பார்ப்பனிய விஷம் குழந்தைகளுக்கு ஊட்டப்படுவதைக் கண்டித்துத் தான் இன்று நாடு முழுக்கக் குரல் எழுகிறது. நாமும் வேண்டுமானால் நமது தமிழ்நாட்டுப் பாட நூலில் கேலிச் சித்திரங்களை இடம் பெறச் செய்வோம்.

இதோ மணவை திருமலைச்சாமி நடத்திய நகர தூதனில் 1937 டிசம்பரில் வெளிவந்த கேலிச் சித்திரம்; இதை தமிழ்நாட்டு வரலாற்றுப் பாடத்தில் வெளியிட்டால் பூணூலை இறுக்கிக் கட்டிக் கொண்டிருப்பாரா சோ?  குல்லுகப்பட்டர் ராஜாஜிக்காக குதிகால் தரையில் படாமல் அல்லவா குதிப்பார்! வெளியிட்டுப் பார்ப்போமா?

– ஈரோட்டுக் கண்ணாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *