ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருமணம் நடக்கிறது. ஓர் ஆண்டாவது சொக்கநாதன் தாலி கட்டுவாரா என்று பார்த்தால், அர்ச்சகர்களேதான் ஆண்டுதோறும் தாலி கட்டுகிறார்கள். வாழ்க மணமக்கள்
– கோவி லெனின்
மே 3, 2012 பகல் 11:59 மணி
நேத்துதான் மிஸ்.மீனாட்சிக்கும், மிஸ்டர்.சுந்தரேசனுக்கும் கல்யாணம் நடந்திருக்கு. அதுக்குள்ள மாப்ள– பொண்ணை அசிங்கப்படுத்துற மாதிரி கோவில்ல “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”னு பாட்டு போடுறாய்ங்க! வெரி சேட்!
– இளம்செழியன் மே 3, 2012 மதியம் 12:02 மணி
பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்:டெல்லி உயர்நீதிமன்றம் -செய்தி.
அப்பிடியே இந்த குடுமி வச்சுகிட்டு சட்டை போடாம பைக்குள போற பார்ப்பனர்களுக்கும்…ஹெல்மெட் மற்றும் சட்டை போட்டுக்கிட்டு போறது கட்டாயம் என்று சட்டம் போடுங்கோ.
– பரணிதரன் கலியபெருமாள் ஏப்ரல் 25, 2012 காலை 7:39 மணி
வியாபாரம்
விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை
வாங்குபவர் நல்லவராக இருக்க வேண்டும்
பரிசுத்ததிற்கு நாங்கள் உத்திரவாதம்
வேலைத்திறன் மாதாமாதம் வருமானம் ஈட்டித்தரும்
விலையாக வேண்டுவதை நாங்கள் தருகிறோம்
இலவச இணைப்பென வாகனமும் உண்டு
சுற்றம் மதிக்க பொன் நகையும் தந்து
விற்கும் விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தி
கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் போது
பன்னீர் தெளித்து வரவேற்கா விட்டாலும்
மண்ணெண்ணெய் எடுக்காமல் இருந்தால் போதுமென்ற
பரிதவிப்போடு விற்றாக வேண்டுமென நினைக்கும் போது
இப்படியொரு நட்ட வியாபாரம் தேவை தானா?
கருவாக உருவாகும் போதே ஆணாக இருந்திருந்தால்
நட்டமெல்லாம் லாபமாய் மாறியிருக்குமே
பெண்ணாக பிறந்ததுவும் யார் குற்றமோ?
– தீபிகா பாலசுப்ரமணியன் மே 4, 2012 மதியம் 12:00 மணி
கோவில்களில் அர்ச்சகர் ஆகும் தகுதி ஒண்ணாங்கிளாஸ் குழந்தைக்கே வந்துவிடுகிறது. ரைம்ஸ் படித்துவிட்டு அப்படியே ஒப்புவிக்கிறது, வேதமந்திரங்களை அப்படியே ஒப்புவிக்கும் அர்ச்சகர்களைப் போல!
– டான் அசோக் மே 7, 2012 மதியம் 3:40 மணி
ஆசிரியர் ; மின் வெட்டின் வகைகள் எத்தனை?
மாணவன் : அறிவிக்கப்பட்ட மின் வெட்டு , அறிவிக்கப்பட்டத மின் வெட்டு , பார்ட் டைம் மின் வெட்டு , சட் டவன் மின் வெட்டு , எதிர்பாராத மின் வெட்டு என்று ஐந்து வகைபடும்.
ஆசிரியர் : V.V.GOOD
– செல்வராஜ் சபரேஷ் ஏப்ரல் 30, 2012 காலை 9:35 மணி
நாகப்பட்டினத்தின் சிறப்பு என்று ஊர்மக்கள் பெருமையாகச் சொலவது…எங்கள் ஊர் கிழக்கில் கடலாலும், வடக்கில் நாகூராண்டவராலும், தெற்கில் வேளாங்கண்ணி மாதாவாலும், மேற்கில் சிக்கல் சிங்காரவேலராலும் பாதுகாக்கப்படும் ஊர் என்பதே. அத்தனை பெருமையிலும் 2004 டிசம்பர் 26 அன்று காலையில் இந்த நான்கு திசையிலிருந்தும் விழுந்தது அடி. ஊரே மயானமானது. சொந்த ஊருக்குள் அகதிகளானோம். கிழக்கின் கோரத்தாண்டவத்தை பிற திசைகளால் நிறுத்த முடியவில்லை.
– கவின் மலர் ஏப்ரல் 11, 2012 மாலை 5:29 மணி
Only Brahmins
வீடு விக்கறவா கூட பிராமீன்ஸ் ஒன்லினு விளம்பரம் குடுக்க ஆரம்பிச்சா என்னமாதிரி ஏழைங்க வீடு வாங்கவே முடியாம போயிடும் போலருக்கேண்ணா!
ஆமா வீடு வாங்க வரவா நம்மவா தானானு எப்படி செக் பண்ணுவா.. சாதி சான்றிதழ் கேப்பாளா? இல்ல பூணூல் இருக்குதானு பாப்பாளா? யாராச்சும் விளக்குங்கோண்ணா…
படம் உதவி: யுவகிருஷ்ணா
– அதிஷா வினோ 9 ஏப்ரல், 2012 பகல் 11:15 மணி