» உடலில் சேரும் கெட்ட நீரைப் பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம்.
» வெள்ளரிக்காயை நறுக்கி அதனுடன் மோர் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும்.
» வாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி நன்றாக பற்களில் படுமாறு மென்று சாப்பிட்டால், வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து பல் ஈறுகளை பலப்படுத்தும். வாய்துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். வெள்ளரிக்காய் நீர்ச்சத்துடன் உமிழ்நீரையும் கலந்து சாப்பிட்டால் நாள் முழுவதும் வாய்துர்நாற்றம் இருக்காது.
» வெள்ளரிக்காய் 96 சதவிகிதம் நீர்ச்சத்தும், நான்கு சதவிகிதம் உயர்ந்த புரதத்தையும் கொண்டது. உடலில் நீர்ச்சத்துக்களைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நல்ல கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் வெள்ளரிக்காயில் நிறைந்திருக்கின்றன.
» உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. மலச்சிக்கல், இரைப்பையில் புண், பித்தக் கோளாறுகள், ரத்த அழுத்தம் போன்றவற்றை வெள்ளரிக்காய் குறைத்துவிடும். குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காய் கல்லீரல் உஷ்ணத்தைத் தணிக்க வல்லது.
» கொழுப்பு, கார்போஹைட்ரேட் சத்துக்களை விரைவில் செரிமானமாக்கி சக்தியாக மாற்றி விடுகிறது. இன்சுலின் சுரக்கச் செய்யும் ஹார்மோனைத் தூண்டும் சக்தியாக வெள்ளரிக்காய் செயல்படுகிறது.
» வெள்ளரிக்காயில் நிறைந்திருக்கும் சல்பர் சத்துக்கள் கூந்தலுக்கு பளபளப்பு தருகிறது. வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி, கண்களில் வைத்தால் கருவளையங்கள் மறைகிறது. அழகு, ஆரோக்கியம் எல்லாம் நிறைந்த வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு அழகுக்கு அழகு கூட்டலாம். மிகுந்த குளிர்ந்த
உடல்நிலையைக் கொண்டவர்கள் வெள்ளரிக்காயை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
– ச. லெட்சுமி, செங்கோட்டை