நரசிம்ம வாமன அவதாரங்கள் சொல்வதென்ன?
– கி.வீரமணி
பாபயோனியில் பிறந்த வைசியர்கள், சூத்திரர்கள், பெண்கள் இவைகளாக இதுவரை எந்த அவதாரமும் வரவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஜாதி, ஜாதி தர்மம் என்ற வர்ணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தவே என்பது இதனை ஆழ்ந்து சிந்திக்கும், விருப்பு வெறுப்பு இன்றிச் சிந்திக்கும் எவருக்கும் புரிந்தாக வேண்டும். பற்பல அவதாரங்கள் குறித்து கெயில் ஓம்வெட் கூறுவது கீழே:
“Upper-Caste, Orthodox and the whole culture of the sacred books, from the vedas through the puranas, was seen by Phule not simply as superstition, but also as alien and as a weapon of rule.
The sacred religious literature was reinterpreted to show how the invading Aryans had conquered the indigenous people through force, treachery and use of religious propaganda. The nine avatars of Vishnu were seen as different stages of the Aryan Conquest. Matsya (the fish) and Kachha (the tortoise) represented invasion by sea; varaha (the boar) was so called because the original Aryans were seen as barbarians by the more civilized native kshatriyas. The story of Nar-sing (the lion-man) and Prahlad represented conquest by treachery and propaganda where the mind of a local prince was corrupted to the point where he was willing to kill his own father. Finally Waman (the Brahmin boy) represented a kind of culmination of the Aryan conquest of Maharashtra by cheating the great Bali out of his kingdom. Phule did not, like the Tamil non-Brahmans, use the story of Rama to symbolize conquest of the south by the north, but the approach was the same. The dasyus or non-Aryans and the demons of the vedas and puranas were said to represent the indigenous population, and were depicted as enlightened Kings and warriors, the Aryans and their gods as treacherous invaders.
The culmination was Phule’s emphasis on Bali-Raja, King Bali. This was in a sense his reply to the elite’s use of Ram, Ganpati or Kali; it was a symbol that united Maharastrian peasant masses with the tales of Aryan invasions. Bali, as has been noted was an ancient symbol for the peasant and at the same time represented a sort of golden age, expressed in the Marathi saying “ida pida javo; balica raja yevo” (“let sorrows and unhappiness go, let the kingdom of Bali come.”) Bali’s Kingdom in addition served as a focus around which positive interpretations of other peasant deities of Maharashtra were elaborated. That is why Phule remained a rationalist, at the same time he had favourable approach to such peasant and low-caste deities as Khandoba, Jotiba, Martand, Kalbhairav, that contrasts with his hostility to the sanskritic deities. Khandoba, for instance is derived from the title of the official in charge of each of the nine Khand, or parts, of Bali’s Kingdom; Mhasobo from Mahasubha (“Great province”) and so on.”
– “Cultural Revolt in a Colonial Society – The Non-Brahmin Movement in western India: 1873 to 1930” By Gail Omvedt, PP. 114 – 115.
மேல் ஜாதிக்காரர்களின் ஆச்சாரங்கள், வேதங்களிலிருந்து புராணங்கள் வரையுள்ள புனித நூல்களின் ஒட்டுமொத்தமான உள்ளடக்கங்கள் ஆகியவவை எல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்று மட்டும் ஃபுலே பார்க்கவில்லை; நமக்கு எதிரானவையாகவும், நம்மை ஆதிக்கம் செலுத்துவதற்குரிய ஆயுதங்களாகவும் அவற்றைப் பார்த்தார்.
வந்தேறிகளான ஆரியர்கள் வன்முறையாலும், வஞ்சனையாலும், மதப் பிரச்சாரத்தாலும் இங்குள்ள மக்களை எவ்வாறு வெற்றி கொண்டார்கள் என்பதைப் புனித மதச் சார்பு இலக்கியங்கள் விளக்குகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களை வெவ்வேறு வகையில் ஆரியர்கள் பெற்ற வெற்றிகளாகவே ஃபுலே கருதினார்.
மச்சாவதாரம் (மீன்), கூர்மாவதாரம் (ஆமை) ஆகிய இரண்டும் கடல் வழியான படையெடுப்பைக் காட்டுகின்றன. வராக (பன்றி) அவதாரம் என ஒன்று சொல்லப்படுகிறது. இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களான படை மறவர்கள் (க்ஷத்திரியர்கள்), வந்த ஆரியர்களை நாகரிகமில்லாத காட்டுமிராண்டிகளாகக் கருதினார்கள்; அதனாலேயே வராக அவதாரம் என்று சொல்லப்பட்டது.
நரசிம்ம அவதாரம் _ பிரகலாதன் பற்றிய கதை, வஞ்சனையாலும், பிரச்சாரத்தாலும் ஆரியர்கள் பெற்ற வெற்றியைக் குறிக்கிறது; இளவரசனாகிய பிரகலாதனுடைய மனதைக் கெடுத்து அவனுடைய தந்தையைக் கொல்வதில் அவனுக்கு விருப்பத்தை ஏற்படுத்தியதை அந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது.
நிறைவான, வாமன அவதாரம் (பார்ப்பனச் சிறுவன்) என்பது, மராட்டிய மண்டலத்தின் பேரரசனாக விளங்கிய மகாபலியை ஏமாற்றி வென்று ஆரியர்கள் தங்கள் குறிக்கோளின் உச்சத்தை எட்டியதை எடுத்துரைக்கிறது.
வடநாடு தென்னாட்டை வெற்றி கொண்டதை உருவகிப்பதுதான் இராமனுடைய கதை என்ற தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்கள் கருதுகிறார்கள். ஃபுலே அதுபோலக் கருத வில்லை என்றாலும், அவரது அணுகுமுறை அப்படித்தான் இருந்தது.
இங்குள்ள மக்களும், அரசர்களும், வீரர்களும் தஸ்யூக்கள் அல்லது அரக்கர்கள் என்றும், ஆரியர்களும், அவர்களுடைய கடவுள்களும் வஞ்சனை நிறைந்த படையெடுப்பாளர்களாகவும் வேதங்களிலும், புராணங்களிலும் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அடிப்படையில்தான் ஃபுலே முடிவாக மகாபலி அரச னைப்பற்றி அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார். இராமனையும், கணபதி அல்லது காளியையும் நம்புகிற ஒரு கூட்டத்தார்க்குச் சொன்ன பதிலாகவும் ஒரு வகையில் இதனைக் கொள்ளலாம்.
ஆரியர்களின் படையெடுப்புகள் பற்றிய கதைகளால் மராட்டிய உழவர் பெருமக்கள் ஒன்றுபடுத்தப்பட்டதன் அடையாளமாக அது இருந்தது. மகாபலி மன்னர், உழவர்களை அடை யாளப்படுத்துகிற பழைமையான சின்னமாக இருந்தார். அதே வேளையில், ஒருவகையான பொற்காலத்தை எடுத்துக் காட்டுகிறவராகவும் இருந்தார். மராத்தி மொழியில் சொல்லப்படும் ஒரு பழமொழி இதனை விளக்குவதாக இருக்கிறது. இடா பிடா ஜாவோ: பாலிகா ராஜா யேவோ – இதுதான் அந்தப் பழமொழி. வருத்தமும் துக்கமும் போகட்டும்; மகாபலியின் ஆட்சி வரட்டும் – இதுதான் அந்தப் பழமொழியின் பொருளாகும்.
மராட்டிய உழவர்களின் கருத்தின்படி பிற தேவதைகளைப் பற்றிய விளக்கங்களைப் பெறுவதற்கும் மகாபலியின் ஆட்சி உதவியாக இருக்கிறது. ஃபுலே ஒரு பகுத்தறிவாளராக இருந்தார்; அதேவேளையில், சமஸ்கிருதச் சார்புடைய தேவதைகளுக்கு மாறுபட்டதாக, மராட்டியத்தின் உழவர்கள், கீழ் ஜாதிக்காரர்கள் ஆகியோரின் தேவதைகளாகச் சொல்லப்படுகின்ற காண்டோபா, ஜோதிபா, மார்த்தாண்டன், காலபைரவன் முதலிய தேவதைகளை ஃபுலே வேறு வகையில் சாதகமான முறையில் பார்க்கிறார்.
சான்றாக, காண்டோபா என்ற தேவதையைப் பார்க்கலாம்; மகாபலி அரசரின் ஆட்சிக்குட் பட்டிருந்த பேரரசு ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஒவ்வொரு பிரிவுக்குப் பொறுப்பாளராக இருந்தவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த பதவிப் பெயர்தான் காண்டோபா என்பதாகும். (காண்டம் – பிரிவு) மகா சுபா என்பதற்குப் பேரரசின் பெரும் பிரிவு (great province) என்று பொருள்.
இப்படித்தான் எல்லாத் தேவதைகளுக்கும் பெயர்கள் அமைந்துள்ளன.
(காலனியச் சமூகத்தில் பண்பாட்டுப் புரட்சி மேற்கு இந்தியாவில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம். 1873 முதல் 1930 முடிய ஆசிரியர்: கெய்ல் ஓம்வேத் – பக்கம்: 114 – 115)
இதே கருத்தை – பூலே பற்றி அறியாமலேயே தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ளார். சமூகப்புரட்சி அறிஞர்கள் ஒரே மாதிரி சிந்தித்துள்ளனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது!
– தொடரும்