தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம செல்லும் என ஏப்ரல் 12 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்தே இச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஒடிசாவில் மாவோஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலி பயணி போசாஸ்கோ ஏப்ரல் 12 அன்று விடுவிக்கப்பட்டார்.
இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் குறித்த விவரங்களை மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என ஏப்ரல் 13இல் ஆணையிடப்பட்டுள்ளது.
காபூல் நகரில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம், அமெரிக்கா, இங்கிலாந்து தூதரகங்கள் மீது தாலிபான் படையினர் ஏப்ரல் 15 அன்று தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்கள்.
பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் குழு ஏப்ரல் 16 அன்று இலங்கை சென்றது. தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் இக்குழுவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
கடந்த 6 மாதங்களில் தொடர்மின் தடையால் கோவை, திருப்பூரில் ரூ.2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏப்.17 அன்று குறுந்தொடரில் முனைவோர் சங்கம் (காட்மா) கூறியுள்ளது.
கண்டம் விட்டு 5 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து இலக்கைத் தாக்கும் அக்னி-_5 அணு ஏவுகணையை இந்தியா, ஏப்.19இல் ஒடிசா, வீலர் தீவு ஏவுதளத்திலிருந்து செலுத்திய சோதனை வெற்றி பெற்றது.
சென்னை, கோட்டை ராணுவக் குடியிருப்பில் சிறுவன் தில்ஷனைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜுக்கு ஏப்.20இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் பிறழ் சாட்சிகள் மீது நடவடிக்கை கோரும் மனுவை விசாரிக்காமலேயே வழக்கைத் தொடர்வதைத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சங்கரராமன் மனைவி பத்மா ஏப்.20இல் புதிய மனு தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இசுலாமாபாத்தில் புதிய விமானம் ஏப்.20இல் தனது முதல் பயணத்திலேயே விழுந்து நொறுங்கி 127 பேர் உயிரிழந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் சுகுமா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் ஏப்.21இல் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். ஏப்.16இல் இலங்கைக்கு சென்றிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏப்.21இல் திரும்பினர்.