கி.வீரமணி
திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் தொண்டரும் தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளரும் நீங்கா அன்பு கொண்டவருமான மறைந்த பே.தேவசகாயம் அவருக்கு மரியாதை செலுத்த 6.-6.-2001 அன்று மதியம் 1:30 மணியளவில் மதுரை சென்றேன். என்னுடன் பொருளாளர் கோ.சாமிதுரை என் வாழ்விணையர் திருமதி மோகனா ஆகியோரும் வந்திருந்தனர். நாங்கள் மறைந்த பெரியார் பெருந் தொண்டரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்த பின் அவரது துணைவியார், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
உரத்த நாட்டிற்கு அருகிலுள்ள ஒக்கநாடு மேலையூர் வீ.நாராயணன், – நா.பாக்கியம், நா.அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் ஒன்றிய தி.க. இளைஞரணிச் செயலாளர் நா.இராமகிருட்டினன், ஒக்கநாடு மேலையூர் மேலத் தெரு ந.கோவிந்தராசு _ இராமு ஆகியோரின் செல்வி கோ.ஈசுவரி ஆகியோரது மண விழாவை ஒக்கநாடு மேலையூரில் 9.6.2001 அன்று 6:30 மணிக்கு நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன்.
கல்வி வள்ளல் மதுரை பே.தேவசகாயம் படத்திறப்பு விழா தல்லாகுளம் பெரியார் மாளிகையில் 11-.6.-2001 மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது. மாநில மகளிரணி பிரச்சாரச் செயலாளர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் தலைமையில் தேவசகாயம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்
தேன். அவரது பெருமைகளை, சாதனைகளை விளக்கிக் கூறினேன்.
உரத்தநாடு நெடுவாக்கோட்டை திராவிடர் கழகத் தலைவர் மு.முருகைய்யன், -பாக்கியம்
ஆகியோரின் செல்வன் மு. காமராஜ், நீடா மங்கலம் ஒன்றிய கவுன்சிலர் மன்னார்குடி வட்டம் செருமங்கலம் தவசச் செல்வம், -_ வெள்ளையம்மாள் ஆகியோரின் செல்வி த.வெண்ணிலாவுக்கும் 13-.06.-2001 அன்று காலை 10:30 மணிக்கு உரத்தநாடு நெடுவாக்கோட்டையில் மண விழாவினை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். முன்னதாக அவர்களின் இல்லத்தையும் திறந்து வைத்தேன்.
26.6.2001 அன்று இலால்குடியில் நடைபெற்ற இலால்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் இரா. சீனிவாசன் -_ யசோதா ஆகியோரின் மகள் பெரியார் செல்வி -_ அதியமான் ஆகியோரது வாழ்விணையர் ஏற்பு ஒப்பந்த விழாவை உறுதிமொழி ஏற்கச் செய்து நடத்திவைத்தேன்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கடமடையைச் சேர்ந்த தீர்த்தகிரி- (கழக ம.நி.கு. உறுப்பினர்) _ சுசீலா ஆகியோரின் செல்வன் முத்தமிழ் செல்வராசன் (காவல் உதவி ஆய்வாளர்) அவர்களுக்கும் தர்மபுரியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் _ தர்மசமர்தினி ஆகியோரின் செல்வி சங்கீதா அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை 30.6.2001 அன்று முற்பகல் 11:00 மணியளவில் சென்னை பெரியார் திடலில், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு. தங்கமணி முன்னிலையில் ஒப்பந்த உறுதிமொழியேற்கச் செய்து நடத்திவைத்தேன். சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி மறுப்பு மணம் இது.
சென்னை பெரியார் திடலில் 10.7.2001 அன்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் படத்தை சட்டப் பேரவைத் தலைவர் டாக்டர் கா. காளிமுத்து திறந்து வைத்தார். முத்து விழா காணும் உவமைக் கவிஞர் சுரதாவுக்கு ‘பெரியார் விருது’ அளித்துப் பாராட்டினேன்.
சென்னை பெரியார் திடலில் 11.7.2001 அன்று புரட்சிக் கவிஞர் விழா- தமிழர் கலை பண்பாட்டு விழா- நாடக விழா என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைச் செயலக சிசில் – பி. கிரியேசன்ஸ் சார்பில் அனைத்திந்திய அளவில் புகழ் பெற்ற ‘இரணியன்’ திருஞானம் அவர்களின் ‘ஊமத்தம்பூக்கள்’ நாடகம் நடைபெற்றது. நாடகக் குழுவினர்க்கு தந்தை பெரியார் உருவம் பொறித்த கேடயம் வழங்கினேன்.
தென்மாவட்ட திராவிடர் கழகக் கொள்கை விளக்க மாநாடு மதுரையில் 13.7.2001 வெள்ளி
யன்று சிறப்புடன் நடைபெற்றது. தங்கரீகல் திரையரங்கத்தில் காலை நிகழ்ச்சிகள் துவங்கின. வெளியிலும் பந்தல் போடப்பட்டு இருந்தது. காலை 8:00 மணிக்கெல்லாம் பந்தல் நிரம்பி வழிந்தது.
சு. அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பெருமக்கள் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையன் ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம், இரா. பெரியார் செல்வன், பூவை புலிகேசி ஆகியோர் மிகுந்த தயாரிப்புடன் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
துணைப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தியை நடுவராகக் கொண்டு நடத்-தப்பட்ட பட்டிமன்றம் சூடும் சுவையும் நிறைந்ததாக அமைந்திருந்தது.
தினமணி திரையரங்கம் அருகில் மாலை 4:45 மணிக்குப் பேரணி புறப்பட்டது. பேரணிக்குத் தென்சென்னை மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர் தே. எடிசன்ராசா தலைமை வகித்து கழகக் கொடியசைத்துப் பேரணியைத் துவைக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிவகாசி ‘வானவில்’ மணி ¢முன்னிலை வகித்துத் துவக்கினார். மாநில சமூகக் காப்பணியின் செயலாளர் இரா. கனகசபாபதி, தேனி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.பி.எஸ்.ஆர். சனார்த்தனம், மண்டல இளைஞரணிச் செயலாளர் வத்திராயிருப்பு சுப்ரமணியன், மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ச. இன்பலாதன், மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சோழவந்தான் ஆறுமுகம், மண்டல இளைஞரணிச் செயலாளர் மதுரை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாடிப்பட்டி மேளம் மண்ணைத் தூள்தூளாக்க, அத்திவெட்டி வீரையன் குழுவினரின் அலகு , செடில் காவடி, அடுத்து பொதுமக்களைக் கவர மகளிர் தீச்சட்டி ஏந்தி கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கிட பேரணியின் துவக்கமே பொதுமக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கருப்பட்டி சிவா, அத்திவெட்டி பாலசுப்ரமணியன் ஆகியோர் முதுகில் அலகு குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்தனர்.
பெரியார் சமூகக் காப்பு அணியின் செயலாளர் இரா. கனகசபாபதி தலைமையில் பெரியார் சமூகக் காப்பு அணியின் அணிவகுப்பு எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.
பெரியார் பிஞ்சுகளும் மகளிரணியினரும் கொள்கை வீராங்கனை
களாக வீரமுழக்கமிட்டு வந்தனர். பேரணியின் முத்திரையாக அமைந்தது இளைஞரணியின் அணிவகுப்பு.- வெள்ளை பேண்ட்,, வெள்ளை ஷூ, கருப்புச் சட்டை, தொப்பி, கையில் கழகக் கொடி ஏந்தி அவர்கள் கொள்கை முழக்கமிட்டு வந்தனர்.
இறுதியாக நான் தீர்மானங்களை விளக்கியும், கழகக் கொள்கைகளை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்திட எடுக்கவேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாகச் சிறப்புரையாற்றினேன்.
நடிப்புலகின் பல்கலைக்கழகம் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் 21.7.2001 சனி இரவு 7:46 மணியளவில் மறைவுற்றார். சனி
யன்று இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் கோவைக்குச் சென்ற நான், சிவாஜிகணேசன் மறைவுச் செய்தியறிந்து தாங்காத் துயரத்தோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.
கோவை, சத்தியமங்கலம் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு அன்றும் மறுநாளும் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு சத்தியமங்கலத்திலிருந்து சாலை வழியாகவே வேன்மூலம் 22.7.2001 அதிகாலை 4:00 மணிக்கு சென்னை வந்தடைந்து, காலை 6:00 மணியளவில் நூற்றுக்கணக்கான கழகத் தோழர்கள் புடைசூழ புறப்பட்டு சிவாஜிகணேசன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு, மகன் பிரபு மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன்.
புழல் நகர திராவிடர் கழகச் செயலாளரும் கழகத் தோழருமான ச. குணசேகரன் அவர்கள் 23.7.2001 அன்று மறைவுற்றார். தோழரின் உடலுக்கு 24.7.2001 அன்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன்.
பெரியார் ஆயிரம் வினா-_விடை நூல் வெளியீட்டு விழா 25.7.2001 அன்று முற்பகல் 11:00 மணிக்கு திருச்சி – பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் எனது தலைமையில் நடைபெற்றது. ச. வெங்கடாசலம் அய்.ஏ.எஸ்(ஓய்வு) அவர்கள் முதல் நூலை வெளியிட, வருமானவரித்துறை(ஓய்வு) வல்லுநர் எஸ். இராஜரத்தினம் பெற்றுக்கொண்டார்.
உரத்தநாடு ஒன்றிய தோழர்கள் சார்பாக விடுதலை சந்தா வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் 28.7.2001 அன்று இரவு நடைபெற்றது. இவ்விழாவில் எனது ஆங்கில நூலான BHAGAVAD GITA MYTH OR MIRACLE என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை பெரியார் பெருந்தொண்டர் எஸ். பகீரதன் வெளியிட, பெரியார் நூலக வாசகர் வட்டத்தலைவர் மயிலை ந. கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
மக்கள் தலைவர் – த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்கள் 30.8.2001 அன்று காலை மறைவுற்றார் என்ற செய்தி அமெரிக்காவில் இருந்த என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அந்நிலையில் கீழ்க்கண்ட எனது அறிக்கையில் எனது கட்டுக்கடங்கா உணர்வுகளை வெளிப்-படுத்தினேன்.
“அந்தோ, பண்பாட்டின் பெட்டகமாம் அய்யா மக்கள் தலைவர் மதிப்பிற்குரிய மூப்பனார் அவர்கள் காலை மறைந்தார் என்ற செய்தி பேரிடி போன்ற அதிர்ச்சிச் செய்தியாகும் நமக்கு!
எவரிடமும் அன்பொழுகப் பேசும் அவரது பான்மை – எவராலும் எளிதில் வரித்துக்கொள்ள முடியாத ஒரு தனித்தன்மை!
காட்சிக்கு எளியராய், கடுஞ்சொல் அறியாராய், எவர்க்கும் உதவும் உத்தமராய்த் திகழ்ந்த அவரது மறைவு, நாட்டின் பொது வாழ்வில் ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்திவிட்டது!
காமராசர் அவர்களுக்குப் பிறகு மக்களால் மதிக்கத்தக்க பெருந்தலைவராக வாழ்ந்து மறைந்துள்ளார்கள்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத துயரம்!
‘உடல்நிலையில் பின்னடைவு’ என்று செய்தி வந்தது மாறி, ‘தேறி வருகிறார்’ என்ற தெம்பூட்டும் செய்தியை தொலை தூரத்திலிருந்தாலும் எதிர்பார்த்த நமக்கு ஏற்பட்ட ஏமாற்றமும், வேதனையும் தாங்க முடியாத துன்பமும், துயரமும் வார்த்தைளால் வருணிக்க முடியாத ஒன்றாகும். வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முன்பு அவர்களை நேரில், அவர்தம் இல்லத்தில் சென்று சந்தித்து விடைபெற்றேன் நான்.
வழக்கமான அன்பும், பாசமும், பண்பும் பொங்கி வழிந்த வண்ணம் அவர் வழியனுப்பினார். அவரை விட்டுப் பிரிவது தற்காலிகமானது என்றுதான் அன்று எண்ணினேன்.
‘இயற்கையின் கோணல் புத்தி’ இப்படி அதனை நிரந்தரமாக்கி, துயரக் கேணியில் தள்ளிவிட்டதே!
மதச்சார்பற்ற அணி ஒரு சக்தி வாய்ந்த அணியாக தமிழ்நாட்டில் உருவாவதற்கு மூப்பனார் அய்யா அவர்கள் எடுத்த முயற்சி எடுத்துக்காட்டானதாகி, வெற்றிக் கனி பறிக்க உதவியது! அதற்குரிய வீரத் தளபதியாய் அத்தலைவர் திகழ்ந்து வரலாறு படைத்தார்!
சென்ற ஆண்டு செப்டம்பரில் பெரியாருக்குப் புத்தாயிரத்தில் விழாவெடுத்து அதை மதச்சார்பற்ற விழாவாகவே நடத்த வேண்டும் என்பதில் அவர்கள் காட்டிய உறுதியும், உற்சாகமும் நம்மால் என்றும் மறக்க முடியாத ஒன்று!
அப்படிப்பட்ட அருந்தலைவர் இப்படியா! பறிக்கப்படுவது?
வேதனை! தாள முடியாத வேதனை!
அவர்தம் தொண்டறத்தைத் தொடருவோம்!
மகத்தான தலைவர் ஒருவரை நம் நாடும், மக்களும் இழந்து தவிக்கும் நிலைதான் என்றாலும், தாங்க முடியாதவைகளையும் தாங்கித்தானே ஆகவேண்டும்?
வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அவரது தொண்டறத்தைத் தொடர துணிவு கொள்வதே அவருக்கு நாம் காட்டும் உரிய மரியாதை ஆகும்!
அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், துணைவியார், பிள்ளைகள், சகோதரர்கள் மற்றம் உறவினர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சகோதர, சகோதரிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை, திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்ளுகிறது.
மக்கள் தலைவராகவே மதிக்கப்பட்ட அவருக்கு நமது முதலமைச்சர் அவர்கள் உரிய அரசு மரியாதை தர ஏற்பாடு செய்வார்கள் என்பது நமது நம்பிக்கை – வேண்டுகோளும்கூட!நேரில் வந்து மரியாதை செலுத்த இயலாத நிலையில், தூரமும், நேரமும் பிரித்துவிட்டதே என்று எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டுள்ளேன்.
திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு நமது வீர வணக்கம்!
திராவிடர் கழகம் சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.
என்று சிகாகோவிலிருந்து எனது இரங்கலைத் தெரிவித்தேன்.
அமெரிக்கா, கனடா நாட்டு சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு எனது வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் மூலம் 26.9.2001 காலை 7:00 மணிக்கு சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன். மறுநாள் 27.9.2001 காலை 10:00 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்துக்குச் சென்றேன். ஜி.கே.வாசன் அவர்கள் வரவேற்றார். மறைந்த மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
கருநாடக மாநிலம் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் 13.10.2001 அன்று உரையாற்றினேன்.
கருநாடக மாநிலம் பெங்களூரில் 14.10.2001 அன்று மாலை பெரியார் நகரில் கழக கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினேன்.
16.10.2001 காலை பெங்களுரில் நடைபெற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வி.சி. கிருஷ்ணன் -_ சுசீலா பவள விழாவில் கலந்துகொண்டேன். பெங்களூர் வீரபத்ர சென்னமல்ல அடிகளாருக்கு பெரியார் எழுதிய நூல்களை வழங்கினேன்.
திருச்சி மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் தி. மகாலிங்கன் – _ திராவிடராணி ஆகியோருடைய பெரியார் இல்லத்தை 16.10.2001 அன்று திறந்து வைத்து உரையாற்றினேன்.
சேலத்தில் 26.10.2001 வெள்ளி காலை 10:10 மணிக்கு சேலம் ஓமலூர் மெயின் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்வர்ணாம்பிகை வணிக வளாக திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதலாவதாக ஸ்வர்ணாம்பிகா வணிக வளாகத்தின் முகப்பில் அமைந்துள்ள ராவ்சாகேப் பி. ரத்தினசாமிப் பிள்ளை அவர்களின் மார்பளவுச் சிலையைத் திறந்து வைத்தேன். ‘‘ஸ்வர்ணாம்பிகை பிளாசா’’வை ரிப்பன் வெட்டி முன்னாள் அமைச்சர் க. ராசாராம் அவர்கள் திறந்து வைத்தார்.
திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 27.10.2001 அன்று நிறுவனர் நாள் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியருடன் நாமும் கலந்துகொண்டோம். பெரியார் கல்வி நிறுவனங்களின் சிறப்புகளையும் மாணவர்களின் சாதனைகளையும், விளக்கி நிகழ்வில் உரையாற்றினோம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 28.10.2001 ஞாயிறு முற்பகல் 11:00 மணிக்கு சரஸ்வதி திருமண மண்டபத்தில் அய்யனார்
குளம் ப.து. சக்கரை – _ ச. கருத்தம்மாள் ஆகியோரின் செல்வன் திராவிடர் கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ச. சந்திரன்,
கெங்குவார்பட்டி வி.பின்னியப்பன் _ பி. தேனம்மாள் ஆகியோரின் செல்வி பி. பஞ்சவர்ணம் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த நிகழ்வு எனது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒப்பந்த உறுதி மொழியேற்கச் செய்து, சுயமரியாதைக் கருத்துகளை விளக்கி உரை நிகழ்த்தினோம்.
தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியில் பன்னாட்டு சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் பற்றிய மாநாடு 1.11.2001 முதல் 3.11.2001 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா 3.11.2001 மாலை 5:00 மணிக்கு நடைபெற்றது. எம்முடன் தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரம் மற்றும் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு கலந்துகொண்டார். விழாவின் நிறைவாக சுற்றுச்சூழல் குறித்து விளக்கி உரையாற்றினோம்.
சென்னை மணலியில் 6.11.2001 அன்று எம்.ஆர்.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த மாணவ- மாணவியர்க்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினோம். உரையில் மண்டல் கமிஷன் அறிக்கையில் எஞ்சிய பகுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும். தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக்குப் போராடுவோம் என்று, வலியுறுத்திக் கூறினேன்.
கும்மிடிப்பூண்டி சிறீலட்சுமி திருமண மாளிகையில் கும்மிடிப்பூண்டி ஏ. மாரிமுத்து -_ கஸ்தூரி ஆகியோரின் செல்வன் மா. குமார், கும்மிடிப்பூண்டி நகரச் செயலாளர் மு. பாபு -_ சரஸ்வதி ஆகியோரின் செல்வி பா. எழிலரசி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை முற்பகல் 11:00 மணிக்கு நடத்தி வைத்தேன். அன்று மாலை 5:00 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள செங்குந்தர் மாளிகையில் திருத்தணி விநாயகபுரம் எம். எல்லப்பன் -_ சரோசா ஆகியோரின் செல்வன். திராவிடர் கழக மாவட்ட இளைஞரணித் துணைத்தலைவர் வழக்கறிஞர் மா. நாராயணசாமி திருத்தணி மேல்முருக்கம்பட்டு எம். சதாசிவம் -_ கவுரி ஆகியோரின் செல்வி ச. சுதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த நிகழ்வை நடத்தி வைத்தேன்.
புதுடில்லி பாம்நொலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டில்லி பெரியார் மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பான ஆக்கப்பூர்வமான சாதனைகளை உள்ளடக்கிய விழாவாக 20.11.2001 செவ்வாய் அன்று மாலை 3:00 மணிக்குத் தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிந்தது. அன்று பகல் 12:00 மணி வரை சமூகநீதி மய்யம் சார்பில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 12 பேராளர்கள் பங்கேற்ற சமூகநீதி குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. சமூகநீதி மய்யத்தின் தேசியத் தலைவர் திரு.சந்திரஜித்யாதவ் தலைமை வகித்தார். நான் ஆங்கிலத்தில் துவக்கவுரையில் சமூகநீதி அடிப்படையில் பெற்றுள்ள வெற்றிகளைவிட பெறவேண்டியவை அதிகம் என்பதை விளக்கி உரையாற்றி-னேன்.
மதுரை மாநகரில் 22.11.2001 வியாழன் அன்று காலை 10:00 மணிக்கு மதுரை கே.கே. நகரிலுள்ள இராஜ்மகால் திருமணமன்றத்தில் மதுரை ஜெயன் நகை மாளிகை உரிமையாளர் சுயமரியாதைச் சுடரொளி கோ. செயக்குமார் – காயத்திரி ஆகியோரின் செல்வி செ. ஆர்த்தி என்கிற இளமதிக்கும் மதுரை கே.எஸ். பரமசிவம் -_ லீலாவதி ஆகியோருக்கும் செல்வன் ப. சசிக்குமாருக்கும் வாழ்விணையர் ஏற்பு ஒப்பந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தி வைத்து விளக்கவுரையாற்றினோம்.
திருச்சி கே.கே. நகரில் பெரியார் நூற்றாண்டு மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ரமணிதேவி – ராகவன் இல்லத்தை 24.11.2001 அன்று திறந்து வைத்தோம். உடன் எனது வாழ்விணையர் மோகனா அம்மையார் கலந்துகொண்டார்.
மதுரையில் 22.11.2001 வியாழன் மாலை 5:00 மணிக்கு மதுரை சிம்மக்கல் ஆட்டுமந்தையிலுள்ள யாதவா திருமண மண்டபத்தில் மதுரை வெ. இராசகோபால் -_ இரா. தனலெட்சுமி ஆகியோரின் செல்வனும் புகைப்படக் கலைஞருமான இரா. இராதாகிருட்டிணன், மதுரை
இரா. அய்யாவு -_ அ. இலட்சுமி ஆகியோரின் செல்வி அ. உமா ஆகியோரின் இணையர் ஏற்பு ஒப்பந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தி வைத்து உரையாற்றினோம்.
மேட்டூர் மாநகரில் 25.11.2001 அன்று மாநாடு போன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பள்ளத்தூர் மக்களை மேட்டூர் கொண்டு வருவதுதான். திராவிடர் கழகப் பணி என்று எமது உரையில் குறிப்பிட்டோம். காலை 9:00 மணிக்கு குஞ்ஞான்டியூரில் தொடங்கி வழி நெடுகிலும் ஒன்பது இடங்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்தோம்.