1) தந்தை பெரியாரின் அன்னையின் பெயர் என்ன?
அ) சின்னத்தாயம்மாள் ஆ) கண்ணம்மாள் இ) பொன்னுத்தாயம்மாள் ஈ) நல்லம்மாள்
2) செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப் பிணி அறிந்திராத நமது ராமசாமியார் காசியில் எச்சிலைக்கு ஏங்கி நின்ற நிலை ஏற்படக் காரணம்
அ) செல்வத்தை ஏழை எளியவருக்கு வாரி வழங்கியமையால் ஆ) குடும்ப ஆச்சாரத்தைக் கைவிட்டமையால் இ) தந்தையிடம் கோபித்துச் சில காலம் துறவியாக வாழ்ந்தமையால் ஈ) பெற்றோர்கள் வீட்டை விட்டுத் துரத்தியமையால்
3) உலகப் புத்தர் மாநாட்டில் கலந்து கொள்ள மணியம்மையாரோடு பெரியார் அவர்கள் சென்ற நாடு எது?
அ) ரஷ்யா ஆ) பர்மா இ) சீனா ஈ) சிங்கப்பூர்
4) இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட ஒருவர் இந்து மதத்திற்கு மாற்றாக என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்குப் பெரியார் சொன்ன பதில்
அ) புத்த மதத்தில் சேரலாம் என்றார் ஆ) வீட்டிற்குள் அசிங்கம் இருக்கிறது, நாற்றம் அடிக்கிறது, எடுத்து எறியுங்கள் என்றால் அதற்கு மாற்றாக அந்த இடத்தில் எதை வைக்கலாம் என்பது சரியா? இ) முகமதியர் மதத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்றார் ஈ) மதம் இல்லாத சுயமரியாதை இயக்கத்தில் அனைவரும் இருக்கலாம் என்றார்.
5) வைக்கம் போராட்டத்திற்காக ஒரு விளம்பர அலுவலகம் திறக்கப்பட்டது. அதற்குப் பெயர் என்ன?
அ) சத்தியாக்கிரக அலுவலகம்
ஆ) போராட்டக் குழு அலுவலகம்
இ) சத்தியாக்கிரக ஆஸ்ரமம்
ஈ) சத்தியாக்கிரகக் காரியாலயம்
6) 1920 முதல்1925 வரை 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பெரியார் வகித்த பதவிகள்
அ) கோவை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
ஆ) இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்
இ) இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
ஈ) மேற்சொன்ன இவையனைத்தும்
7) ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகியோர் எதற்குச் சரியான கர்த்தாக்கள் எனப் பெரியார் கூறுகிறார்?
அ) மக்களின் அடிமைத் தன்மைக்கு
ஆ) மக்களின் பேராசைக்கும் முட்டாள்தனத்திற்கும்
இ) விழாக்களுக்கும் வீண்செலவுகளுக்கும்
ஈ) சடங்குகளுக்கு
8) `உயர் எண்ணங்கள் மலரும் சோலை – எனத் தந்தை பெரியாரைப் புகழ்ந்து பாடிய கவிஞர்
அ) கவிஞர் கண்ணதாசன்
ஆ) பாவலர் பாலசுந்தரம்
இ) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
ஈ) கவிஞர் சுரதா
9) பெண்ணடிமை பற்றி தந்தை பெரியார் விளக்கி எழுதியுள்ள நூல்
அ) `பெண் விடுதலை
ஆ) `பெண்ணடிமை ஒழிப்போம்
இ) `பெண் ஏன் அடிமையானாள்?
ஈ) ` பெண்ணுரிமை முழக்கம்
10) சோதனைக்குழாய் குழந்தை பற்றிய பெரியாரின் பேச்சு முதன் முதலில் குடிஅரசு இதழில் வெளிவந்த நாள்
அ) 31.8.1940 ஆ) 31.7.1939 இ) 31.1.1938 ஈ) 31.5.1938
பெரியாரை அறிவோமா – விடைகள்
1. அ
2. இ
3. ஆ
4. ஆ
5. இ
6. ஈ
7. ஆ
8. இ
9. இ
10. அ