வரலாற்றுச் சுவடு: புஷ்யமித்திரனின் பவுத்த ஒழிப்பு!

2022 ஆகஸ்ட் 16-31 2022 வரலாற்றுச் சுவடு

“புஷ்யமித்திரனின் புரட்சி பவுத்தத்தை ஒழித்துக் கட்டுவதற்காகப் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட அரசியல் புரட்சியாகும்.
வெற்றி பெற்ற பார்ப்பனீயம் என்ன செய்தது என்று கேட்டால், அந்த அடாவடிச் செயல்கள் ஏழு வகைப்படும்.
1. பார்ப்பனர்களுக்கு ஆட்சி செய்யும் உரிமையையும் அரசர்களைக் கொலை செய்யும் உரிமையையும் வழங்கிற்று.
2. பார்ப்பனர்களைச் சிறப்பு உரிமை பெற்ற மக்களாக ஆக்கியது.
3. ‘வர்ணம்’ என்பதை ‘ஜாதி’ என்று மாற்றியது.
4. பல்வேறு ஜாதிகளுக்கிடையில் பூசலையும் விரோத பாவத்தையும் தோற்றுவித்தது.
5. சூத்திரர்களையும் மகளிரையும் இழிவு-படுத்தியது.
6. படிநிலை கொண்ட ஏற்றத் தாழ்வை உருவாக்கியது.
7. மரபு சார்ந்தும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடியதாகவும் இருந்த சமூக அமைப்பை சட்டப்படியானதாகவும் வளைந்து கொடுக்க இயலாததாகவும் ஆக்கிவிட்டது.
முதலாவதாக…
புஷ்யமித்திரனின் புரட்சி தொடக்கத்தில் பார்ப்பனர்களுக்குத் தொல்லையை ஏற்படுத்தியது. மக்கள் அந்தப் புரட்சியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மக்களின் வெறுப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு _ புரட்சியைப் பற்றிக் கூறும்போது, புஷ்யமித்திரன் இழி பிறப்பாளன் என்றும், அனார்யன் (ஆரியனல்லாதவன்) என்றும் குறிப்பிடும் கவி பாணரின் கூற்று. அது உண்மைதான். புஷ்யமித்திரனின் செயல் ஆரிய விதிகளுக்கு முரண்பட்டதுதான். ஏனெனில், அன்றைய ஆரிய விதிகளின்படி,
1. சத்திரியன் மட்டுமே ஆளத் தகுதி படைத்தவன்.
2. பார்ப்பனர்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது.
3. அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி எழுவது பாவச் செயல்.
புரட்சியைத் தோற்றுவித்த புஷ்யமித்திரன் இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராகக் குற்றமிழைத்து விட்டான். அவன் பார்ப்-பனனாக இருந்தும் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான், ஆயுதங்களைப் பயன்படுத்தினான், தானே அரசனாகிவிட்டான் (இவன் மகத சாம்ராஜ்யத்தை – பவுத்த ஆட்சியை ஒழித்து, சுங்க வம்ச பார்ப்பன ஆட்சியை அமைத்தவன்). இந்தத் துரோகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில், இது அப்பட்டமான சட்ட மீறல். பார்ப்பனர்கள் இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் துணிந்து சட்டத்தை மாற்றினார்கள். அது மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ளது.
அந்த மாற்றங்களாவன:
ஙீமிமி 100: அரசாங்கத்தின் முதன்மைத் தளபதி பதவி, அரசாங்கத்தின் தலைமைப் பதவி, சாம்ராஜ்யத்திலுள்ள அத்தனை பேருக்கும் மேலான இடம் அனைத்தையும் பெறப் பிராமணன் தகுதியானவன். இது சட்டத்தில் ஒரு மாற்றம். புதிய சட்டம் பிராமணன் சேனாதிபதி ஆகவும், மற்ற அரசுகளின் மீது போர் நடத்தி வெல்லவும் தானே சக்கரவர்த்தியாகவும் உரிமை பெற்றவன் என்று கூறுகிறது.
ஙீமி 31: சட்டத்தை நன்கறிந்த பிராமணன் தனக்கு நேர்ந்த எந்த அநீதி பற்றியும் அரசனிடம் முறையிடத் தேவையில்லை. அவனுக்கு அநீதி இழைத்தவர்களைத் தண்டிக்க அவனுக்கே அதிகாரம் இருக்கிறது.
ஙீமி 32: அவனுக்கு இருக்கும் அதிகாரம் அரசனின் அதிகாரத்தைக் காட்டிலும் மேலானது. அரசனின் அதிகாரம் மற்றவர்களைச் சார்ந்தது. பிராமணன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டே எதிரிகளைப் பணியவைக்க முடியும்.”
(இராமன்-இராமாயணம், கிருஷ்ணன் – கீதை: டாக்டர் அம்பேத்கர் நூலிலிருந்து)