கருநாடக மேனாள் முதல்வர் பங்காரப்பா டிசம்பர் 26 அன்று மரணமடைந்தார்.
2012ஆம் ஆண்டினை தேசிய கணித ஆண்டு என பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 26 அன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா டிசம்பர் 27 அன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், டிசம்பர் 29 அன்று கூச்சல் குழப்பம் காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வடகொரியா நாட்டின் புதிய தலைவராக கிம் ஜாங் அன் டிசம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
வங்கக் கடலில் உருவான தானே புயல் டிசம்பர் 30 அன்று கடலூர் _ புதுச்சேரி இடையே கரையைக் கடந்தபோது பெரும் பாதிப்பு ஏற்படுத்தியதுடன் 48 பேர் பலியாகினர்.
கடலிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை ஜனவரி 1 அன்று ஈரான், பெர்சிய வளைகுடாவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஹோர்முஸ் நீரிணையில் வெற்றிகரமாகச் செய்து பார்த்தது.
முல்லைப் பெரியாறு அணை பற்றி தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கை நீதிபதி ஆனந்த்திடம் ஜனவரி 2 அன்று தாக்கல் செய்யப்பட்டு, அன்றே விசாரணை டில்லியில் நடைபெற்றது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க உத்தரவிட முடியாது என ஜனவரி 3 அன்று கேரளாவின் கோரிக்கையை அய்வர் குழு நிராகரித்தது. அய்வர் குழுவிடம் தமிழ்நாடு கேரளா சார்பில் அறிக்கைகள் ஜனவரி 6 அன்று தாக்கல் செய்யப்பட்டன.
ஒடிசா மாநிலம் புவனேஷ் வரத்தில் டிசம்பர் 3 அன்று 99ஆவது அறிவியல் மாநாட்டினைப் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
பெங்களூர், ஆமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடக சிறையில் உள்ள அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்க முடியாது என ஜனவரி 3 அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஸீ முல்லைப் பெரியாறுக்குப் பதிலாக புதிய அணை கட்டி பராமரிப்பை தமிழ்நாடு, கேரளா இணைந்து மேற்கொள்ளலாம் என்ற தீர்மானம் கேரள மந்திரிசபைக் கூட்டத்தில் ஜனவரி 4 அன்று நிறைவேற்றப்பட்டது.
தங்க நகைகளுக்கு பி.அய்.எஸ். ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயம் ஆக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஜனவரி 4 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் (வி.ஏ.ஓ.) 4 வாரங்களுக்குள் பணி ஆணை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 4 அன்று ஆணையிட்டது.