பிறப்பு : 1.12.1900
தமிழறிஞர் சாமி சிதம்பரனார் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத் தளபதிகளில் ஒருவர். ‘குடிஅரசு’ ஏட்டில் அறிவார்ந்த கருத்துகளை அள்ளித் தந்து அறிவியக்கத் தொண்டாற்றினார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் ‘தமிழர் தலைவர்’ என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர். ‘விடுதலை’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.