எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே, நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.., எல்லாக் கோவிலுக்கும் போனேன்.
சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளரவை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன்.
ஒரு சாமியும் நான் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை. தலைக்கு மேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டை போட்ட தொண்டர் ஒருவர் வந்து என்ன பிரச்சினைங்க என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டியதுங்க என்று சொன்னேன். அவர் கேட்டார் – நீங்கள் என்ன தொழில் பண்ணுகிறீர்கள் என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன்.
முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்?
சினிமாவில் டோப்பாவை வாங்கிவைத்துக் கொள்ளலாமே, தலையில் முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள் நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகின்றேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளரவைக்கும் அப்படின்னு சொல்லி ஒரு சாமிக்கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ.வெ.ராமசாமி. பெரியாருடைய புத்தகங்களைப் வாங்கிப் படித்தேன்.
அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. கும்பிட வேண்டிய அவசியமுமில்லை. அவர் சொன்ன விசயங்களையும், அவருடைய தத்துவங்களையும், அவருடைய புத்தகங்களையும் படித்தேன். தலைக்கு மேலே முடி வளருதோ இல்லையோ தலைக்கு உள்ளே மூளை வளர்ந்து விட்டது..!
– இனமுரசு சத்யராஜ்
‘சென்னை பெரியார் திடலில்’
நடந்த விழாவில் பேசியது.