கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள் யார்?
குமுதம் : பெரிய மற்றும் சிறிய கோயில்களில் அடித்தக் கொள்ளை, கொலை போன்ற விரும்பத் தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு. என்ன காரணம்? மக்களுக்கு கடவுளின் மீது உள்ள பக்தி போய்விட்டதா?
ஜெயேந்திர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியர்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர் களில் அனேகம்பேர் பக்தர்களாகவே இருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத்திற்கு இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை பொதுவாக பேராசை ஜாஸ்தியாகிவிட்டது. பணமும் அதிகரித்துள்ளது.
‘குமுதம்’, 12.09.1996
யார் இந்த ஜக்கி வாசுதேவ்?
கோயில்கள் இந்து அறநிலையத் துறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற கூக்குரலில் தலைமை வகித்து முட்டாசு கட்டும் இந்த ஜக்கி வாசுதேவ் யார்? அவர்மீது என்னென்ன வழக்குகள் உள்ளன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது முக்கியம்.
கோவையில் 13.12.2011 அன்று தன்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பை இவரே ஏற்பாடு செய்தார். அதில் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். அந்தச் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரம்
1. உங்கள் யோகா மய்யத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது, உண்மையா?
2. யோகா மய்யத்திற்குள்ளும், உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும், வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?
3. உங்கள் பெயர் ஜாவா வாசுதேவ் என்பதை எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?
4. 1970ஆம் ஆண்டு கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா? என்று கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளிக்காது மவுனமாக இருந்த போது மீண்டும் ஊடகவியலாளர்கள் அதே கேள்விகளைக் கேட்க – அவரது ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கினார்கள்.
இந்த தாக்குதல் தொடர்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.12.2011) அன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஈஷா மய்யம் ஜக்கிவாசுதேவ் மீது புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு கோவை மாநகர காவல்துறை ஆணையர் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் ஈஷா யோகா மய்யம் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல் நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். புகாரின் பதிவு எண்.433/1808. என்ன ஆயிற்று என்பதே தெரியவில்லை.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவரின் பொருளாதார ஆய்வறிக்கையின் 32ஆம் பக்கம் என்ன சொல்லுகிறது? யானைக் காப்பகங்களில் நகர மயமாக்கல் என்ற தலைப்பில் ஜக்கி வாசுதேவின் நில அபகரிப்புப் பற்றி, விதி மீறல்கள் பற்றி விரிவாகக் கூறப்படவில்லையா?
யானைகளின் வழித்தடங்களில் யோகா பயிற்சி மய்யக் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? அரசு வழங்கிய 44.3 ஏக்கர் பட்டா நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்கள் விரட்டப்பட்டது எப்படி?
2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, 11973 சதுர மீட்டர் பரப்பளவு விளை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது சாமியார் ஜக்கியால்.
இத்தகைய சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குற்றவாளியின் அழைப்பின் பெயரில் அவர் நடத்தும் விழாக்களுக்கு பிரதமர் வருகிறார் – குடியரசுத் தலைவர் வருகிறார் – மாநில முதல் அமைச்சர் வருகிறார் – அந்த ஜக்கி சாமியாரிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள் என்றால் இந்த அவலத்தை என்ன சொல்ல?
அடித்த கொள்ளைகள் போதாது என்று இப்பொழுது கோயில்களை அரசிடமிருந்து விடுவித்து அதிலும் புகுந்து விளையாடலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டு அலைகிறார்கள் — எச்சரிக்கை!
மக்களிடம் ‘மஞ்சள் காமாலை’ என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், இது பல வகையான கல்லீரல் நோய்களின் பொதுவான ஓர் அறிகுறியேயாகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சியை ஆங்கிலத்தில் “சிர்ரோசிஸ்’’ என்றழைப்பர். கிரேக்க மொழியில் இருந்து உருவான இச்சொல் “பழுப்பு மஞ்சள்’’ என்று நிறமியைக் குறிக்கும் சொல். மருத்துவர்கள் பயன்படுத்தும் “இதயத் துடிப்பு மானி’’ (Stethoscope) யை கண்டுபிடித்த மருத்துவர் ‘ரெனே லென்னாக்’ என்பவர்தான், 1819ஆம் ஆண்டில் இப்பெயரை வழங்கினார். கிரேக்கச் சொல்லான ‘ஹெபர்’ என்ற சொல்லிலிருந்து வந்த இந்தச் சொல்லின், மூலச் சொல் ‘ஹெபட்’ என்பதாகும்.
முடிவெடுக்கும்போது பெண்களை ஒதுக்காதீர்கள்!
அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றிருக்கிறார்.
பெண்களின் நிலைகுறித்த அய்.நா. ஆணையத்தின் 65ஆம் அமர்வில் அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவராக கமலா ஹாரிஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இன்று ஜனநாயகம் அதிக அளவில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதை நாம் அறிவோம். தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஒரு சிக்கலான சரிவைக் கண்டுள்ளன. ஜனநாயகத்தின் நிலையானது, அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் பொருத்து அமைகிறது. முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடு உள்ள ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது. பெண்களின் பங்கேற்பு ஜனநாயகத்தைப் பலப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள்
1. இந்து அறநிலையத்துறை மசோதா – கி.வீரமணி 30.09.1891
2. ‘தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும்’ – மூலநூல் ஆசிரியர் கு.நம்பி ஆரூரான் – தமிழில் க. திருநாவுக்கரசு, பி.ஆர். முத்துக்கிருஷ்ணன்
3. கோயிற்பூனைகள் – கோவூர் கிழார்
4. ‘விடுதலை’, ‘ஜூனியர் விகடன்’
தீர்மானம் 2
கரோனா : உயர்நீதிமன்றங்களின் உரிமையை உச்சநீதிமன்றம் பறிப்பதா?
கரோனா தொடர்பான எந்த வழக்குகளையும் உயர்நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், அத்தகைய வழக்குகளை உச்சநீதிமன்றம் நேரடியாக விசாரிக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு – உயர்நீதிமன்றங்களுக்குரிய உரிமைகளைப் பறிக்கும் மிகை மிஞ்சிய செயல் என்று இக்கூட்டம் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறது.
அந்த உத்தரவை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
சைகை மொழியில் பாடப் புத்தகங்கள்
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், ஆசிரியர் கையேடுகள் மற்றும் பல கல்விப் பொருள்களையும் சைகை மொழியில் வெளியிடவுள்ளது.
இதன் மூலம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளும் இந்தியச் சைகை மொழியில் இனி கல்வி பயிலலாம். இது அவர்களின் கற்றல் திறனையும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் இந்த சைகை மொழி பாடப் புத்தகங்கள் கிடைக்கும்.