- இந்தியா – பிரான்ஸிடையே 7 ஒப்பந்தங்கள் டிச 6 இல் கையெழுத்-தாகியுள்ளன.
- வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதைத் தடுக்க, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் டிச 7 இல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
-
- அமெரிக்க ராணுவ, தூதரக ரகசியங்களை இணையதளத்தில் வெளியிட்டுவந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் லண்டனில் டிச 7 இல் கைது செய்யப்பட்டு, டிச 17 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
-
-
-
-
- வீனஸ் கோளினை ஆய்வு செய்வதற்கு ஜப்பான் அனுப்பிய அதத்சுகி (விடியல்) விண்கலம் டிச 7 இல் வீனசைச் சென்றடைந்-துள்ளது.
-
-
- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு உ.பி. ரேபரேலியில் உள்ள சி.பி. அய் நீதிமன்றத்தில் டிச 8 இல் விசாரணைக்கு வந்தது. அஞ்சு குப்தா ஆஜராகாததால் ஜன 3க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக பி.அமுதா, டி.ராஜேந்திரன் ஆகியோரை நியமித்திருப்பதாக தமிழக அரசு டிச 9இல் உத்தரவு வெளியிட்டுள்ளது.
- இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (டி.ஆர்.டி.ஓ) சார்பாக, அணு ஆயுதங்களை 2000 கி.மீ. தூரம்வரை சுமந்து சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணையின் சோதனை டிச 10 இல் தோல்வியில் முடிந்துள்ளது.
-
-
- அரியானா மாநிலம் ஹசார் என்ற இடத்தில் டிச 12 இல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹீடா மீது இளைஞர் ஒருவர் ஷுவினை வீசியுள்ளார்.
-
-
- அரவாணிகளை மற்றவர்கள் பிரிவில் சேர்க்கலாம் என்ற ஆலோசனைக் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு டிச 13 இல் ஏற்றுக் கொண்டுள்ளது.
- மழையினால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதற்கு மத்திய குழு டிச 16 இல் தமிழகம் வந்தது.
- தமிழக மேல்சபைத் தேர்தலை எதிர்த்துத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் டிச 16 இல் தள்ளுபடி செய்தது.
- தமிழக அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கல்விக் கட்டணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் டிச 16 இல் தீர்ப்பளித்துள்ளது.
- இந்தியா, சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் டிச 16 இல் கையெழுத்தாகியுள்ளன.
- பொதுவிநியோக அட்டைகளை (ரேஷன் கார்டு) 2011 டிசம்பர் 31 ஆம் தேதிவரை உபயோகப்-படுத்த கூடுதல் தாள்களை இணைக்கும் பணி நவ 20 இல் தொடங்கியது.