¨ பெண்களைப் படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்கா?
(‘குடிஅரசு’ 16.11.1930)
¨ இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.
(‘குடிஅரசு’ 28.4.1935)
¨ கற்புக்காக கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.
(‘குடிஅரசு’ 8.1.1928)