அமெரிக்காவின் லூசியானா மாநில ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜின்டால் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அர்ஜென்டினாவில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போது அப்பொறுப்பில் தலைவராக இருக்கும் கிறிஸ்டினா பெர்னான்டஸ் (88) வெற்றி பெற்றுள்ளார்.
2 ஆண்டுகளுக்குள் இழப்பீடு தராவிட்டால் நில எடுப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகர நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் மரணமடைந்ததையடுத்து, புதிய பட்டத்து இளவரசராக அந்நாட்டு உள்துறை அமைச்சர் இளவரசர் நயீப்பை (78) மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி சிறையில் உள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள் ளது. தமிழக அரசும் தூக்குதண்டனையை நிறைவேற்ற மறுப்பு தெரிவிக்கவில்லை.
சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும்வகையில் முதன்முறையாக சீனாவில் தாவர எண்ணெயில் இயங்கும் விமானம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க வேண்டாம் என ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் இடிந்தகரை கடலில் மிதக்கவிடப்பட்டன.
பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (அய்.பி.எம்.) முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) ரொமெட்டி பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்காவின் தொலைத்தொடர்பு ஆணையத்தின் ஆணையராக அமெரிக்க வாழ் இந்தியர் அஜீத் வரதராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
லஞ்ச ஊழல் வழக்கில் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கேரள மேனாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அதனை எதிர்த்து வி.எஸ்.அச்சுதானந்தம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மாட் பட், முகமது ஆசிப் உள்ளிட்ட நால்வர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என்று கூறி அவர்களுக்கு சிறைத் தண்டனை அளித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
லிபியாவில் நேட்டோ படைகள் தனது இராணுவப் பணியை முடித்துவிட்டதாக அறிவித்ததையடுத்து புதிய அரசின் இடைக்காலப் பிரதமராக அப்துர் ரகீம் அல்கைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு இராணுவத்தின் சார்பில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தில் பெண் குழந்தை முதலில் பிறந்து, பின் ஆண் குழந்தைகள் இருந்தாலும் பெண்ணுக்குத்தான் அரியணை ஏறும் முதலுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடுகளின் தலைவர்கள் இணைந்து முடிவு எடுத்துள்ளனர்.