சிலந்திகளில் பல வகைகள் உள்ளன. சிலவற்றிற்கு எட்டுக்கால்கள் மட்டும் அல்ல! எட்டுக் கண்கள் உள்ளன.
******
சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களிலுள்ள மிகவும் வேகமாக சுற்றி வருவது புதன். மணிக்கு 1,72,248 கி.மீ வேகத்தில் இது சுற்றி வருகிறது.
******
அரபு நாடுகளில் பசும்பால் கிடையாது. ஒட்டக்பால்தான். இதில் பசம்பாலைவிட பத்து மடங்கு அதிக இரும்புச் சத்து உள்ளது.
******
மீனில் உள்ள சத்துப் பொருள்கள் :
நீர் – 75%, புரோட்டீன் – 19%, கொழுப்பு – 5%, நைட்ரஜன் – 3%, பாஸ்பரஸ் – 1% முதலியன
(ஒரு பவுண்டு மீனில் 500 கலோரி சக்தி உள்ளது)
******
புதிய டாக்டர்
மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவி இல்லாமலே, முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் காலம் வந்துவிட்டது. பாடியோ(BodyO) எனப்படும் இந்தப் பெட்டியில் 10 நிமிடங்கள் உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற பலவற்றை நாமே பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாம். பரிசோதனை முடிவுகளை மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். துபாய் போன்ற நாடுகளில் இந்தப் பரிசோதனைப் பெட்டியின் வழியாக உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதாம்.
******
இந்தியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை கன்னிமரா நூலாகம் துவங்கப்பட்ட நாள் 1896 டிசமபர் 5.