செய்திச் சிதறல்கள்

ஆகஸ்ட் 01-15 2019

மின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதி அமெரிக்காவின் ஃபுளோரிடா.

******

தபால் தலை

உலகின் முதல் தபால் தலையில் இடம் பெற்ற படம் விக்டோரியா ராணி. இதை வடிவமைத்தவர் ரோலண்ட் ஹில். 1840இல் வெளியான இதன் பெயர் பென்னி பிளாக். மதிப்பு ஒரு பென்னி.

இந்தியாவில் 1834இல் முதல் தபால்தலை வெளியானது. அதிலும் விக்டோரியா ராணியின் தலைப்படமே இடம் பெற்றது. தபால் பில்லைகளில் தலைப்படமே இடம் பெற்று வந்ததால், அது தபால் தலை ஆயிற்று.

******

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்தது.

******

இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. இதில் 1200 கி.மீ. தமிழகக் கடற்கரையாகும்.

சிறுத்தை ஓடத் தொடங்கிய சில நொடிகளிலேயே 110 கி.மீ வேகம் கொள்ளும்.

 ******

உலகின் மிக அகலமாக சாலை

பிரேஸில் நாட்டில் மான்மெண்டல் ஆக்ஸிஸ் என்ற சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் ஒரே நேரத்தில் 160 கார்கள் இணையாகச் செல்ல முடியுமாம். இந்தச் சாலையின் நீளம் 24 கி.மீ. தூரமாகும். இந்தச் சாலையின் அகலம் 250 மீட்டர். ஆறு பாதைகளாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் செல்கின்றன.

இதுவே உலகின் மிக அகலமான சாலையாகும்.

******

மிகப் பெரிய நூல்

‘தென்னாட்டின் கதை’ என்ற அமெரிக்க நூலே உலகத்திலேயே மிகப் பெரிய நூலாகும். இந்நூல் வெளியான ஆண்டு 1925. இந்நூலின் உயரம் 6 அடி, 10 அங்குலம், அகலம் 9 அடி, 2 அங்குலம், கனம் ஒரு அடி. இந்த நூலின் மேலட்டை மாட்டுத்தோலால் ஆனது. ஒரு முழு மாட்டுத் தோலே இதில் பயன்படுத்தப்பட்டது. இந்நூலை ஒரு தனி நபரால் தூக்கிச் செல்ல முடியாது.

******

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்தது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *