மருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்

ஜூன் 16-30 2019

உலகிலேயே மிகப்பெரிய பழம் பலாப்பழம்    (The World Biggest Fruit) ஏழைகளின் பழம் என்றும் (Poorman’s Fruit) என்றும் கூறுவார்கள். பலா மரம் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக வளரும். ஒரு மரத்தில் இருந்து வருடத்திற்கு 100 முதல் 250 பழங்கள் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு பழமும் 3 முதல் 30 கிலோ எடை இருக்கும்.

இப்பழத்தில் உள்ள பல்வேறு சத்துக்கள் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது. பலாவில் உள்ள மருத்துவ குணங்களைக் காணலாம்.

100 கிராம் பலாப்பழத்தில் 95 கலோரி எரிசக்தி (Energy) உள்ளது. பழத்தில் சுக்ரோஸ், ப்ரக்டோஸ் உள்ளதால் உடலுக்குத் தேவையான சக்தியையும் வழங்குகிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து 15 கிராம் உள்ளதால் சிறந்த மலமிளக்கியாக (Laxative) வேலை செய்கிறது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலின் உட்புறச் சுவர்களில் படலமாக அமைந்து பெருங்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கிறது.

வைட்டமின் ஏ சத்து 110 அய்.யு உள்ளது. இதனால் பிளேவனாய்டு  (Flvanoide) , பீட்டா கேரோட்டின் (B carotene) , ஜான்தீன் (Xanthene), லூடின்  (Leutin), கிரிப்டோ ஜான்தின்  (Crypto Xanthene) போன்றவை ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுவதால் கண் பார்வை நன்றாக இருக்க உதவுகிறது. உடலின் உள் உறுப்புக்களின் மியூகஸ் மெம்பரேன்  (Mucous Membrane) என்னும் உட்புறச் சுவர்களும், தோலும் ஆரோக்கியமாக இரக்க உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் நுரையீரல் மற்றும் வாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. சளி மற்றும் நோய்த் தொற்றுகளையும் தடுக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் பைட்டோ நியூட்ரியன்ஸ் (Phyto Nutritions) எனப்படும் லிக்னன்ஸ் (Lignans), ஐசோ பிளேவின் (Iso Flavin), சபோனின் (Saponin) போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோயை தடுக்கிறது.

இப்பழத்தில் போலிக் ஆசிட், பி1, பி6, பி12 போன்ற வைட்டமின் சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக இதய நோய்களைத் தடுக்கும் சக்தி கொண்டது. ஹோமோ சிஸ்டின் (Homo Cystene) என்ற அமினோ அமிலத்தின் அளவு குறைந்து விடுவதால் இதய நோய்களும் மாரடைப்பும் (Heart Attack) 25 சதவிகிதம் தடுக்கப்படுகிறது.

பலாப்பழத்தில் பொட்டாசியம் 303 மி.கி., சோடியம் 3 மி.கி., மக்னீசியம் 37 மி.கி., கால்சியம் 34 மி.கி. உள்ளது. இரும்புச் சத்தும் உள்ளதால் உடலில் உள்ள திரவங்களான இரத்தம் போன்றவை கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதால் இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், சீராக இருக்க உதவுகிறது. சிறுநீரக நோயாளிகள் பலாபழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையின்படி நடக்க வேண்டும்.

மக்னீசியம் பலாப்பழத்தில் 37 மி.கி. உள்ளது. நமது எலும்பு வளர்ச்சிக்கு மக்னீசியம் சத்து அவசியம் தேவை. பெண்களுக்கு மக்னீசியம் குறைபாடு அதிகம் ஏற்படுவதால்தான் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யானையைப் போல அசைந்து அசைந்து நடக்கின்றார்கள்.

ஆஸ்டியோ போரோசிஸ் (Osteo Porosis)  நோயைத் தடுக்கிறது. பலாப்பழத்தில் உள்ள மக்னீசியம், கால்சியம் சத்துக்கள், ஆஸ்டியோ பீனியா (Osteo Penia) மற்றும் ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படும் எலும்பு வலுக்குறைந்து போகும் தன்மையைத் தடுக்கிறது. தினந்தோறும் தேவையான 6 சதவிகித கால்சியம் சத்து பலாப்பழத்தில் இருந்து கிடைப்பதால் எலும்பை உறுதியாக்குகிறது.

பெண்களுக்கு தலைமுடி நீண்டு வளர்வதற்கு பலாப்பழம் உதவுகிறது. ஆஸ்துமா நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பலாப் பழத்தில் காப்பர் சத்து உள்ளதால் தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்ய உதவுவதால் தைராய்டு நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *