நமது உடலில் 30 சதவிகிதம் வரை ரத்த இழப்பு ஏற்பட்டால் சமாளிக்கலாம். 40 சதவிகிதம் ரத்த இழப்பு ஏற்பட்டால் உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும். தீ விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவரால் 35 சதவிகிதம் வரை தீக்காயங்களைத் தாக்குப் பிடிக்க முடியும். இது அதிகரித்தால் பிழைப்பது கடினம். ஆக்சிஜன் இல்லாவிட்டால் நம்மால் இரண்டு நிமிடங்கள் மட்டுமே சமாளிக்க முடியும். இரண்டு நிமிடங்களைத் தாண்டினால் மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் உயிரிழப்பு ஏற்படும்.
காற்று, நீர் சரியாகக் கிடைத்து உணவில்லாமல் இரண்டு நாள்கள்வரை ஆரோக்கியமாக இருக்க முடியும். மூன்றாவது நாள் பார்வை மங்க ஆரம்பிக்கும். அதிகபட்சமாக ஏழு நாள்கள்வரை தாக்குப் பிடிக்கலாம். அதற்கு மேல் உடலுறுப்புகள் செயலிழக்கத் தொடங்கிவிடும்.