ஒளிமதி
இந்து மதமும் அதன் சாஸ்திர புராணங்களுமே கலாச்சார சீரழிவிற்குக் காரணம் மட்டுமல்ல வழிகாட்டிகளுமாகும். இந்த அப்பட்டமான உண்மையை மறைத்து, பெண்ணுரிமைப் பேசுவதையும், அதற்கான போராட்டங்களையும் காரணமாகக் காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
இந்து மதக் கடவுள் கதைகளும்
கலாச்சார சீரழிவும்
லிங்க புராணம் என்ன சொல்கிறது?
சிவபெருமான் காமப் பெருக்கால் ரிஷிபத்தினிகள் வீடுகளுக்குச் செல்கிறான். அப்போது ரிஷிகள் வெளியில் சென்றிருந்ததால், காம வெறியில் தவித்த சிவபெருமான் ரிஷிபத்தினிகளை ஒவ்வொ ருத்தியாக வன்புணர்ச்சி செய்தான். கடைசியாக ஒரு ரிஷிபத்தினியை வலுக் கட்டாயமாக புணர்ந்தபோது ரிஷி வந்துவிட்டார்.
இந்த கொடுங்காட்சியைக் கண்ட ரிஷி கடுங்கோபங் கொண்டு, “எங்கள் பத்தினிகளை வன்புணர்ச்சி செய்த உன் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவது!’’ என்று சாபம் விட்டான்.
சிவனின் ஆணுறுப்பு அறுந்து கீழே விழ வந்து கொண்டிருந்தது. அது பூமியில் விழுந்தால் உலகம் அழிந்துவிடும் என்று அஞ்சிய தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி தன் பெண்ணுறுப்பால் அறுந்து வீழ்ந்துகொண்டிருந்த சிவனின் ஆணுறுப்பைத் தாங்கினாள். அதுவே சிவலிங்கம் என்கிறது இந்த மத புராணம்!
அயோக்கியத்தனத்தின் விளைவால் வந்த, ஆபாசத்தின் அடையாளமான சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூசை, அட அயோக்கிய சிகாமணிகளே! இந்தக் கதை கலாச்சாரத்தை சீரழிக்காமல் பெண்ணுரிமை முழக்கம்தான் சீரழிக்கிறதா?
இயற்பகை நாயனார் கதை என்ன?
சிவபக்தர் ஒருவன் இயற்பகை நாயனார் வீட்டிற்கு வருகிறான். இயற்பகை நாயனார் யார் எதைக் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவர். அவரிடம் வந்த சிவனடியார் உன் மனைவியை எனக்கு கொடு என்கிறான் அந்த சிவபக்தன்.
பக்தியில் முண்டி நின்ற இயற்பகை நாயனார், தன் மனைவியையே அந்தச் சிவனடியாருக்குக் கூட்டிக் கொடுத்து அனுப்பினார். அடுத்தவன் பெண்டாட்டியை கொடு என்று கேட்கும் இந்து மதம் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறதா? பெண்ணுரிமைப் பிரச்சாரம் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறதா?
கடவுள் கண்ணனின் காலித்தனங்கள்:
ஆயர்பாடியில் ஓய்வில்லாமல் ஒவ்வொரு பெண்ணிடமும் உடலுறவு கொண்டு உல்லாசமாக பொழுதுபோக்கியவன் அல்லவா உங்கள் இந்து மதக் கண்ணன்.
கண்ணன் தாபம் தீர்ந்துவிட்டால் ஓடிப்போவானாம். பெண்களோ தாபம் தணியாமல், கண்ணன் என்று நினைத்து கடம்பமரம் போன்ற பலமரங்களைக் கட்டியணைத்து காமத்தினவு தீர்ப்பார்களாம்.
மரத்தை அணைத்தபின்னும் காமத்தினவு ஆறாத பெண்கள் தங்களுக்குள்ளே ஒருத்தியை கிருஷ்ணனாகக் கருதி கட்டியணைத்து காமத்தினவு தீர்த்துக் கொள்வார்களாம்!
அண்ணாவின் கம்பரசத்தைவிட கண்ணரசம் கூடுதலாய் சுவைக்கிறதல்லவா?
கடவுள் கண்ணனுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல 16,008 கோபிகள். இத்தனை பெண்களோடு உடலுறவு கொண்டு களித்த கதைகள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தாது; பெண்கள் ஆண்களைப் போல கல்வி, பதவி, ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பதுதான் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துமா?
குளத்தில் குளித்த பெண்களின் சேலைகளை பொறுக்கிக் கொண்டு போய் மரத்தில் உட்கார்ந்துகொண்ட பொறுக்கிக் கண்ணன், சேலைகளைக் கேட்ட பெண்களைப் பார்த்து, “நிர்வாணமாகக் கரையேறி வந்து கையை நீட்டிக் கேட்டால்தான் தருவேன்” என்று கண்டிப்புடன் கூற, பெண்கள் வேறு வழியின்றி நிர்வாணமாக கரையில் நின்று கேட்க அக்காட்சியை அணுஅணுவாய் இரசித்து மகிழ்ந்த கண்ணனின் காலித்தனம் கலாச்சாரத்தைச் சீரழிக்காமல் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதுதான் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறதா?
அய்ந்து ஆண்களுக்கு ஒரே மனைவி
பாஞ்சாலி கதை கலாச்சாரம் காக்கிறதா?
ஆண் பல பெண்களை மணக்கும்போது பெண் பல ஆண்களை மணந்தால் என்ன தப்பு என்று மனிதநேயத்தோடு, சமத்துவ நோக்கில் பெரியார் கேட்டதால் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்கிறாயே உன்னுடைய பாஞ்சாலி கதை என்ன?
அய்ந்து ஆண்களுக்கு ஒரு மனைவி பாஞ்சாலி. ‘ஷிப்ட்’ முறையில் அவளைப் புணருவார்கள்.
ஒருவன் உள்ளே இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக அவனது செருப்பை வெளியிலே விட்டுவிட்டுச் செல்வான். அப்படி ஒரு நாள் தருமன் வெளியில் தன் செருப்பை விட்டுவிட்டு பாஞ்சாலியுடன் உடலுறவு கொண்டான். அப்போது தருமன் செருப்பை நாய் தூக்கிச் சென்றுவிட்டது. அப்போது பாஞ்சாலியோடு உடலுறவு கொள்ள வீமன் வருகிறான். செருப்பு இல்லாததால் யாரும் உள்ளே இல்லையென்ற உள்ளே செல்கிறான். அங்கே பாஞ்சாலி மீது தருமன் படுத்திருக்கிறான். வீமனைக் கண்ட தருமருக்கு என்ன செய்வதென்று புரியாமல் சங்கடத்தில் அதிர்ந்தார். அதற்குப் பெயர்தான் ‘தர்மசங்கடம்’ என்பது. அப்படித்தான் அச்சொல்லாட்சியே வந்தது. இந்தக் கதையைப் பரப்புவதால் கலாச்சாரம் கெடாமல் பெண்ணுரிமை பேசுவதால்தான் கலாச்சாரம் கெட்டுவிட்டதா?
காஞ்சிபுரத்து கோயில் கருவறையிலே பெண்ணைக் கற்பழித்தானே தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர், அவன் கலாச்சாரத்தை சீரழிவிற்குக் காரணமா? ஆணைப் போலவே பெண்ணும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற போராட்டங்கள் கலாச்சாரத்தைச் சீரழிவிற்குக் காரணமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பத்திரிநாத் என்ற பார்ப்பான் கோயில் கருவறையில் ஒரு பெண்ணுடன் வன்புணர்ச்சி செய்தானே. அவனால் கலாச்சாரம் கெடவில்லை. பெரியார் பெண்ணுரிமைப் பேசியதால் கலாச்சாரம் கெட்டுவிட்டதா?
தமிழ்நாட்டில் மட்டுமா? இந்தியா முழுவதும் கோயில் கருவறைகள்தானே காமக்களியாட்டக் கூடங்களாக பார்ப்பனர்களுக்குப் பயன்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் தபோய்-வட்தால் நாராயணசாமி கோயில் அர்ச்சக பார்ப்பனர்கள் இருவர் கோயிலுக்கு வந்த பெண்களை, தங்கள் குடியிருப்பிற்குக் கூட்டிக் கொண்டுபோய் வன்புணர்ச்சி செய்தது ‘சந்தோஷ்’ என்னும் இணையதளத்தில் வெளிவந்து சந்து, பொந்தெல்லாம் சிரிப்பாய் சிரித்ததே! இவர்களால் கலாச்சாரம் அழியாமல் பெண்ணுக்கு சம உரிமை வேண்டும், பெண்ணுக்கு சமவாய்ப்பு வேண்டும், பெண் தன் விருப்பப்படி வாழ உரிமை வேண்டும் என்று கேட்பதால்தான் கலாச்சாரம் சீரழிந்துவிட்டதா?
இந்தியா முழுக்க கோயில் கருவறையில் நடைபெறும் கற்பழிப்பு நிகழ்வுகள் அன்றாட செய்தியாகிவிடடதை மறைத்து பெண்ணுரிமை பேசுவதுதான் கலாச்சார சீரழிவிற்குக் காரணம் என்பது கயமைத்தனம் அல்லவா?
பேருந்தில் பயணம் செய்த கல்லூரி நண்பர்களில் ஆணை அடித்து இறக்கிவிட்டு, அந்தப் பெண்ணை இந்து மதவெறி கொண்ட காலிகள் வன்புணர்ச்சி செய்து சிதைத்தார்களே! ‘நிருபமா’ என்ற பெயரால் வரலாற்றில் பதிவாகி உலகையே உலுக்கிய இந்த கலாச்சார சீரழிவு இந்து வெறியர்கள் நிகழ்த்தியவை அல்லவா?
பொள்ளாச்சியில் நடந்துள்ள வன்புணர்வு கொடுமைகளுக்கு யார் காரணம்? நீங்கள் கூறும் கலாச்சார காவலர்கள் நிகழ்த்தியவை அல்லவா அவை?
தாயுடன் உடலுறவு கொண்ட இந்து கலாச்சாரம்
குலோத்துங்கபாண்டியன் ஆட்சி நாளிலே, அவந்தி நகரத்தில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி இரதியை விடவும் அழகுடையவள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் காமமிகுதியினாலே தன் தாயை விரும்பினான்; அவளும் அதற்குடன்பட்டாள். அப்பெருங் கொடும்பாவி தாயைப் புணருவதை, தந்தை குறிப்பினால் அறிந்து, பிறர் அறியாமல் மறைத்தான். வேறொரு நாளிரவில்தன் மகன் அவன் தாயுடன் புணருவதைப் பார்த்தும், ஏதும் செய்யாமல் சென்றுவிட்டான். அப்பொழுது மகன் அவனைக் கொல்லவெழுந்தான். அவன் தாய், “அப்பாவைக் கொல்லாதே’’ என்று சொல்லித் தடுத்தாள். ஆனால், மகன் தாய் சொல்லைக் கேளாமல் ஒரு மண்வெட்டியை யெடுத்துத், தன் தந்தையை வெட்டிக் கொன்றான்.
அதன் பின் அப்பாதகன், அவ்விரவிலே தந்தை உடலை எரித்துவிட்டு, தன் தாயோடு உல்லாசமாக இருப்பதற்காக மலைகள் பொருந்திய காட்டிற்குச் சென்றான். இந்த மாபாதக மகனுக்கு அருள்பாலித்தவன்தான் காமங்கொண்டு கண்ட பெண்களைப் புணர்ந்த இந்து மதக் கடவுள் சிவன். இப்படிப்பட்ட கதைகளைக் கூறும் இந்து புராணங்களால் கலாச்சாரம் சீரழியாமல் பெரியார் பெண்ணுரிமைப் பேசியதால் சீரழிந்ததா?
ஜெயேந்திர சங்கராச்சாரி யோக்கியதை என்ன?
எழுத்தாளர் அனுராதாரமணன்
அனுராதாரமணன் அளித்த வாக்குமூலம் உங்களுக்கு மறந்துபோய் விட்டதா? காஞ்சி காமகோடி மடத்தை, காமகேடி மடமாக மாற்றி, காமக்களியாட்டம் நடத்திய ஜெயேந்திரர் கலாச்சார காவலரா? அப்படிப்பட்ட ஆட்களால் கலாச்சாரம் அழியாமல், பெண்ணும் மனிதப்பிறவி. அவளுக்கு எல்லா உணர்வுகளும் உண்டு. அவளுக்கும் மானம் மரியாதை உண்டு என்று பெரியார் பிரச்சாரம் செய்து, பெண்கள் தன்மானத்தோடு முன்னேறி கல்வி, பதவிகளில் வந்ததால்தான் கலாச்சாரம் கெட்டுவிட்டதா?
காஞ்சி ஜெயந்திரர்
பெரியார் ஒழுக்கம் வேண்டாம் என்றாரா?
“பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து. பக்த இல்லை என்றால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால், ஒழுக்கம் இல்லையென்றால் எல்லாமும் பாழ்” என்ற பெரியாரைவிட ஒழுக்கக் காவலர் உலகில் எவர்?
பெண் ஒழுக்கம் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று பெரியார் எங்கே சொன்னார்?
மனைவியை இழந்தவன் மறுமணம் செய்வதுபோல கணவனை இழந்த பெண் மறுமணம் செய்ய வேண்டும் என்றார்.
ஆணுக்குத் தாலியில்லாதபோது பெண்ணுக்கு மட்டும் தாலி ஏன் என்றார். ஆணுக்குச் சொத்துரிமை இருக்கும்போது பெண்ணுக்கும் வேண்டும் என்றார்.
ஆண் கற்பதுபோல் பெண்ணும் கல்வி கற்க வேண்டும்;
ஆண் சண்டைப் பயிற்சி செய்வதுபோல் பெண்ணும் பயிற்சி பெற வேண்டும்;
ஆணைப் போலவே பெண்ணும் தலைமுடி வெட்டி, பேண்ட் சட்டை போட வேண்டும். 16 முழ புடவையை சுற்றிக்கொண்டு ஏன் சிரமப்பட வேண்டும் என்றார்.
பெண் ஏன் ஏராளமான நகை அணிய வேண்டும்? அவள் என்ன நகை ‘ஸ்டான்ட்டா’? என்றார்.
பிள்ளை பெறுவது பெண்ணின் விருப்பத்தில் இருக்க வேண்டும் என்றார். பெண்ணின் விருப்பப்படி திருமணம் நடக்க வேண்டும் என்றார். இவையெல்லாம் மனிதநேயமும், சமத்துவ எண்ணமும் உள்ள எவரும் வலியுறுத்தும் கருத்துக்கள்தானே! பெரியார் ஒரு மனிதநேயர். அதனால் அவர் அப்படிக் கூறி இச்சமுதாயத்தை மாற்றினார்.
பெரியார் பிரச்சாரத்தால் பெண்கள் படித்து, பதவிக்கு வந்து, விரும்புகின்றவரை மணப்பதால் கலாச்சாரம் கெட்டுவிட்டதா? கணினி யுகத்தில் கட்டுப்பாடில்லா தகவல் பரிமாற்றத்தால் கலாச்சாரச் சீரழிவு நடக்கிறதா? எது உண்மை?
நீதிமன்றம் சம உரிமை வழங்கினால் அதனால் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்பது அயோக்கியத்தனம் அல்லவா? பெண்கள் அடுப்படியை விட்டு வெளியில் வந்தால் கலாச்சாரம் அழிகிறது என்பதைப் போல ஒரு கயமைத்தனம் வேறு உண்டா? வீட்டுக்குள் இருக்கிற பெண்ணைக் கூட வன்புணர்ச்சி செய்கிறான்! இதற்கு என்ன தீர்வு?
ஆணின் அடாவடித்தனங்களை கடுமையான தண்டனைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்வு கூறாது, பெண் சுதந்திரமாக உரிமையோடு வாழ்வதால்தான் கலாச்சாரம் கெடுகிறது என்பது அயோக்கியத்தனமான பிரச்சாரம் அல்லவா? பள்ளிகளில் கற்பிப்பது, பெற்றோர் வழிகாட்டுவது, ஊடகங்கள், இணைய தளங்களைக் கட்டுப்பாடுடன், கண்ணியமாய் செயல்பட வைப்பது போன்ற தீர்வுகளைக் கூறாது,பெண்ணுரிமைப் பேசுவதால்தான் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்பது அசல் அயோக்கியத்தனமாகும்!