குறும்படம்
நவீன தொழில் நுட்பத்தால் ஆக்கத்தைக் காட்டிலும் கேடுதான் அதிகம் என்பது போன்ற ஒரு சிந்தனை மயக்கம் இருக்கிறது. ஆனால், இஞ்சி தின்ன குரங்கு என்ற இந்தக் குறும் படத்தில் நவீன திறன் கைபேசி காதலைக் கைகூட வைக்கிறது. அதை கதையில் திருப்பத்தைக் கொடுப்பதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுத்தியிருப்பது நம்பும்படியாக இருக்கிறது. இன்னொன்று, காதலுக்கு தடையாக இருப்பவர் கடவுள் நம்பிக்கையாளராகவும், ஒழுக்கம் குறைந்தவராகவும் காட்டியிருப்பது, சமூகத்தில் நிலவும் மிக முக்கியப் பிரச்சனையின் மய்யத்தை சுட்டிக் காட்டியிருப்பது போல அமைந்திருக்கிறது.
இயக்குநர் இந்தக் கண்ணோட்டத்துடன் கதையை அமைத்திருக்கிறார் என்பதற்கு சான்று கதை நாயகனின் பெயர் கார்க்கி. இஞ்சி தின்னக் குரங்கு யார்? என்பதை குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். தமிழ் சார்ட் கட் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கிறார். இதை youtube-இல் காணலாம்.
-உடுமலை