மக்களைக் கவரவும், சமாதானப்படுத்தவும் நம் அரசியல்வாதிகள் எப்போதும் அதிகமாக நம்புவது தமது பேச்சுத் திறமையைத்தான்! காற்றோடு போய் விடுகின்ற பேச்சுகளினூடே இந்தத் தேர்தல் கூட்டங்களில் தங்கள் கவனத்தைக் கவர்ந்த சில பேச்சுக்களைப் பற்றி பொது மக்கள்…
ஆனந்தி: கறுப்புச் சட்டை போட்டிருப்பாரே, ஆங்… வீரமணி. அவர் பேச்சை எதேச்சையாக கேட்டேன். லேட்டஸ்ட்டான விஷயங்களை வெச்சுப் பேசினது ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுபோல் முன்பு கலைஞர் சொன்னாராமே…! ஜெயித்தால் அண்ணா வழி… தோற்றால் பெரியார் வழின்னு… தற்போது கலைஞரை பெரியார் வழிக்குக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்… என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, கூட்டமும் இதைப் புரிந்து கொண்டு கை தட்ட… ஜாலியா இருந்தது.
(ஆனந்த விகடன், 12.9.1999)
Leave a Reply