அகிலம் போற்றும் ஆசிரியர் – பெருந்தகை
அகவை என்பது எண்பத்தாறு இது
தகவல் பகரும் பொன்னான நேரம்!
தலைவரைப் போற்றும் கண்ணான காலை! – இவர்
பதினோரு வயதில் மேடையில்
பட்டையைக் கிளப்பியவர்
பதக்கம் வென்ற பல்கலை மாணவர் – நம்
இனம் காத்து வரும் திராவிட வழக்குரைஞர்!
தந்தைக்குப் பின் கழகம் காக்கும் – பெருமை
திராவிட இயக்கத்தின் வெற்றிச் சரித்திரம்!
அல்லும் பகலும் அயராதுழைக்கும் அறிவுப்பெட்டகம்
சொல்லும் செயலும் பெரியார் வழியில் தொடரும் நித்தமும்!
விடுதலை நாளிதழின் மூச்சுக்காற்றாய் இவர்
சமூக நீதிக்கான களத்தின் தளபதி!
இட ஒதுக்கீட்டைக் காக்கும் கழகத்தின் அரண்
கலைஞர் பெருமகனின் கரம் கோர்த்து நடந்த இளவல்!
வாழ்வியல் சிந்தனையை வடித்துத்தரும் கருவூலம்
சனாதனத் தீங்கை ஒழிக்கக் களமாடும் ஆளுமை!
உண்மைத் தமிழர்களின் ஒப்பற்ற தலைமை
பன்முகத்தன்மை கொண்ட பகுத்தறிவுக் களஞ்சியம்!
புரட்டு வாதங்களைப் புரட்டி எடுக்கும் போர்வாள்
திரிபு வாதங்களை திணறச்செய்யும் திறனாய்வாளர்!
ஆரியப்படையை வென்றெடுக்கும் – பேராண்மை
இயக்கத்தை வளர்த்தெடுத்த இமயம்!
கொள்கைக்காக வாழ்ந்து வரும் கோமான்
மாசு- மருவற்ற – மனிதம்!
கடலூர் மாவட்டம் தந்த புனிதம்
கழகம் கண்டெடுத்த மானுடம்!
வாழ்க! ஆசிரியர் – வளர்க! அவர்தம் தொண்டு…
– கவிமுகில் பெ.அறிவுடை நம்பி,
மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்