அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்?

நவம்பர் 01-15

முத்தலாக்குக்கு எதிரான தீர்ப்பை வரவேற்ற இந்துமத வெறியர்கள், அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அளித்த தீர்ப்பை எதிர்ப்பது  ஏன்? 

இஸ்லாம் மதம் அனுமதித்த ‘முத்தலாக்’ முறை பெண்ணுரிமைக்கு எதிரானது என்பதால் உச்சநீதிமன்றம் நீக்கியது. அப்போது அதை வரவேற்று ஆதரித்த இந்துமத வெறிக் கூட்டமான ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் பாஸிசப் பேர்வழிகள், அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ‘விஜயபாரதம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திருத்த வேண்டும் என்று எழுதுகிறது. இது என்ன இரட்டை நிலைப்பாடு? இதுதான் மனுநீதித் தத்துவமா? ஆரிய பார்ப்பன நீதி இதுதானா?

இல்லாத சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிக்கு பல கோடி செலவு செய்வதும், இருக்கும் தமிழர் தொல்பொருள் ஆய்வை முடக்கி வைப்பதும் ஆரிய பார்ப்பனக் கூட்டத்தின் அயோக்கியத்தனம் அல்லவா?

தமிழ்த் தேசியம் பேசி பார்ப்பனரும் தமிழர் என்று கூறும் பாதி வேக்காடுகள் சிந்திக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *