Don’t be too quick to judge
அடர்ந்த காடு! அதன் நடுவில் ஒரு தார்சாலை. அதில் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். சாலையோரம் ஒரு இருக்கை. அதில் ஒரு பெண் தனியாக அமர்ந்து ஓவியம் வரைந்து கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சியே ஒரு ஓவியம் போலத்தான் இருக்கிறது. நடைபயிற்சிக்கு வரும் ஒருவர் அவர் வரைந்து கொண்டிருக்கும் ஓவியத்தைப் பற்றிப் பேசுகிறார். அந்தப் பெண் அவரைப் பார்க்கிறாரே தவிர, பதில் சொல்லவில்லை. இதனால் அவர் அந்தப் பெண்ணைப் பற்றி தவறாக எண்ணியவாறே பயிற்சிக்குச் சென்று விடுகிறார். திரும்பி நடை வரும்போது, தனது ஙிணீரீ-இன் கீழே அந்தப் பெண் வரைந்த ஓவியம் இருக்கிறது. வியப்புடன் எடுத்துப் பார்த்து திடுக்கிடுகிறார். அதில், “நான் வாய் பேச இயலாத ஊமை’’ _ என்று எழுதியிருக்கிறது. தவறுக்கு வருந்தி, மன்னிப்புக் கேட்க அந்தப் பெண்ணைத் தேடுகிறார். அவர் இல்லை. பெருமூச்சு விடுகிறார். இதுதான் ‘ஞிஷீஸீ’t தீமீ tஷீஷீ ஹீuவீநீளீ tஷீ ழீuபீரீமீ’ என்ற 3:42 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம். அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் தலைப்பும்! கதையும்! கடைபிடிக்க வேண்டிய ஒரு பண்புதான். காட்சி ஊடகத்தின் மூலம் சொல்லப்பட்டுள்ளதால் இன்னமும் கவனம் பெறுகிறது. இயக்குநர் Maazkhan. இதே பெயரில் youtube-இல் காணலாம்.
– உடுமலை