நூல்: இதழியல் சிலிர்ப்புகள்
ஆசிரியர்: மு.பி.பாலசுப்ரமணியன்
வெளியீடு: தமிழாலயம், 124/3, பாரதி குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600040.
தொலைபேசி: 044-26161661
பக்கங்கள்: 264 நன்கொடை: 175
‘தமிழாலயம்’ இதழின் சிறப்பாசிரியரான தமிழறிஞர் பேராசிரியர் மு.பி.பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சுவைமிகு தமிழில் அறியவேண்டிய அரியத் தகவல்களைக் கொண்ட களஞ்சியமாக வெளிவந்துள்ளது. ‘தமிழாலயத்தில்’ வெளிவந்த தலையங்கங்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி ‘நெஞ்சில் நிறைந்ததோர்’ என்னும் தலைப்பில் திரு.வி.க., சேதுப்பிள்ளை, ஆப்ரகாம் பண்டிதர், தனிநாயகம் அடிகளார், சிலம்பொலி செல்லப்பன், சாமிவேலு, மலேசிய மணி, வெள்ளையனார், தளபதி ஸ்டாலின், கவிஞர் பொன்னிவளவன் போன்றோர் குறித்த அரிய சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இரண்டாம் பகுதியில் இன, மொழி உணர்வுகள் சார்ந்த கட்டுரைகளும் திராவிடர் இயக்கம் அதன் சித்தாந்தம் இந்துத்துவ எதிர்ப்பு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு குறித்த தகவல்கள் இளைஞர்களும் ஊடகவியலாளர்களும் அறிய வேண்டியதாகும்.
மூன்றாம் பகுதியில் தமிழ் ஈழம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நான்காம் பகுதி அயல்நாடுகள் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அய்ந்தாம் பகுதியாக அறிவியல் தமிழ் இதழில் வெளியான தலையங்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.