உலக மக்கள் தொகையும் இந்தியாவும்

பிப்ரவரி 16-28

உலக மக்கட்தொகை 2050இல் 900 கோடியே 80 இலட்சமாக உயர்ந்துவிடும் என்று அய்க்கிய நாடுகள் அவை கூறுகிறது. உலகில் மக்கட் தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை 130 கோடியாகும். முதல் இடத்தில் உள்ள சீனாவின் மக்கட்தொகை 140 கோடியாகும். 2050இல் இந்தியா சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கட் தொகையில் உலகின் முதல் நாடாக மாறிவிடும் என்றும் கணித்துள்ளார்கள்.

2050இல் நைஜீரியா மக்கள் தொகையில் மிக  வேகமாக வளர்ந்து உலகின் மூன்றாவது நாடாக இடம்பெறும். தற்போது பொதுவாக தம்பதியரின் கருத்தரிக்கும் திறன் குறைந்துவரும் நிலையிலும் மக்கட்தொகை கூடுதல் என்பது தொடர் நிகழ்வாகவே உள்ளது.

உலகின் மக்கட்தொகை ஒவ்வொரு ஆண்டிலும் எட்டு கோடியே முப்பது இலட்சம் அளவில் அதிகமாகிக் கொண்டு வருகிறது. 26 ஆப்பிரிக்க நாடுகளின் மக்கட்தொகை 2050இல் அனேகமாக இரட்டிப்பாகிவிடும். 60 வயதும் அதற்கும் மேலும் உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட 2050இல் இரண்டு மடங்காகவும், 2100இல் மூன்று மடங்காகவும் உயர்ந்துவிடும்.

வயதான முதியவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள (95,20,00000) தொண்ணூற்றைந்து கோடியே இருபது இலட்சத்திலிருந்து 2050இல் (2,10,00,00,000) இருநூற்றுப் பத்து கோடியாகவும், 2100இல் (3,10,00,00,000) முந்நூற்றுப் பத்து கோடியாகவும் உயரும் என்றும் அய்க்கிய நாடுகள் அவை கணித்துக் கூறியுள்ளது.

தகவல்: டைம்ஸ் ஆப் இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *