(பிறந்த நாள்: 04.01.1643)
2008 மே 15 அன்று லண்டனில் மேஃபேர் எனும் இடத்தில் புளும்ஸ்பரி ஏலக் கடையில் விஞ்ஞானி அய்ன்ஸ்டின் ஜெர்மனி மொழியில் எரிக்குட்கிண்ட் எனும் மெய்யறிவாளருக்கு 1954 ஜனவரி மூன்றாம் தேதியிட்ட கடிதங்கள் இரண்டு லட்சம் பவுனுக்கு விற்கப்பட்டன. அக்கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியிருப்பதாவது: என்னைப் பொறுத்த வரையில், கடவுள் என்னும் சொல் மனிதரின் நலிவின் (Weakness) வெளிப்பாடு என்றும், விளைவு என்றும் கருதுகிறேன். பைபிள் என்பது பெருமைக்குரிய ஆனால், நாகரிகம் அடையாத (Premitive) மக்களின் மரபு வழிக் கதைகளின் திரட்டாகும்.
அவை சிறு பிள்ளைத்தனமானவை.என்னைப் பொறுத்தவரையில், மற்ற எல்லா மதங்களையும் போலவே (யூத மதமும்) மிக மிகச் சிறுபிள்ளைத்தனமான, மூடநம்பிக் கைகளின் வடிவமாகவே தெரிகிறது.
யூதர்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் மகிழ்கிறேன். அவர்களுடைய மனநிலையுடன் ஆழமான உறவு எனக்கு இருக்கிறது. ஆனால் பிற மக்களிடமிருந்து வேறுபடும் தன்மைகள் அவர்களிடம் இல்லை என்பது என் கருத்து. மற்ற மக்களைவிட யூதர்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்லர் என்பது என்னுடைய அனுபவம். அவர்களிடம் அதிகாரம் இன்மையால் மிக மோசமான புற்றுநோய் போன்ற நடப்புகளில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டவர்கள். மற்றபடி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என யூதர்களிடம் எதையும் விசேடமாக நான் காணவில்லை என்று அந்தக் கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியுள்ளார்.
பிறந்த நாள்: 04.01.1643