தொழில்மேதை ஜி.டி.நாயுடு தந்தை பெரியாரின் மிக நெருங்கிய நண்பர்.
தந்தை பெரியாருடன் உரிமையோடு நகைச்சுவையோடு உரையாடுபவர். பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை. தம் தந்தை உருவாக்கிய தோட்டத்தில் காவலர்போல் பணியாற்றி அனுபவங்களைப் பெற்றவர்.
மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துனர், ஓட்டுநர் என்ற நிலைகளில் இருந்து ‘மோட்டார் மன்னர்’ என்ற அளவிற்கு உயர்ந்தவர். தம் உழைப்பால் _ அறிவால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனவர்.
நூற்றுக்கு மேற்பட்ட பொருள்களை உருவாக்கியவர். ஒரே வாழைத்தாரில் ஆயிரம் பழங்களை பழுக்கச் செய்தவர்.உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தவர்.
ஹிட்லரையும் முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமராவில் படம் எடுத்தவர்.
திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் பங்கேற்று முழங்கியவர். தனித் தமிழ்நாடு கோரிக்கையில் மிகவும் நம்பிக்கை உடையவராக இருந்தவர்.
மத்திய அரசு இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்காததோடு அதிக வரியையும் போட்டது.இதனைக் கண்டித்து சென்னையில் தாம் கண்டுபிடித்த கருவிகளை உடைக்கும் போராட்டத்தை நடத்தினார்.
அவரது நினைவு நாள்: 04.01.1974