குறும்படம்

டிசம்பர் 01-15

Me & Mr. Unknown –
எஸ்.எஸ்.தினேஷ்குமார், செல்பேசி: 97511 88805

காதல் திருமணம் செய்து எந்தவித ஆதரவுமின்றி, பரபரப்பான நகர வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள படம்.

பிரியாவும் அனுவும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள். காதல் மணம் புரிந்த பிரியாவின் நட்புக் கிடைக்க, தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதுபோல அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்கின்றனர் சக்தி-_அனு தம்பதிகள். இந்த சூழ்ச்சியை அறியாத பிரியா, அனுமீது பரிதாபப்படுகிறாள். நட்பினால், அனைத்துக் குடும்பச் செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறாள்.

பிரியாவும் அவள் கணவனும் அனுவின் கணவன் சக்தியைத் திருத்தத் திட்டம் போடுகின்றனர். அனுவும், சக்தியும் போட்ட சூழ்ச்சியை அறியாமல். சக்தியைத் திருத்தினார்களா அல்லது சக்தியின் சூழ்ச்சியில் பிரியாவும் அவள் கணவனும் வீழ்ந்தார்களா என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Facebook இல் உலகம் முழுவதும் தொடர்பு வைத்திருக்கும் நம்மால் பக்கத்து வீட்டில் இருப்பவரைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்ற வசனமும் ஆங்காங்கே பயன்படுத்தப்படும். நோ யுவர் நெய்பர் (Know your neighbour) என்ற வார்த்தையும் சிந்திக்க வைப்பன.-

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *