தனி ஒருவன்
வேளச்சேரி, கொட்டிவாக்கம் பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 7,8,9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இணைந்து இந்த மூன்று நிமிட குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
நதிக்கரையோரம் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் சிறுவர்கள் அனைவரும் குப்பைகளை அவரவர் வீடுகளுக்கு முன் கொட்டும்போது, ஒரு சிறுவன் மட்டும் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்டுகிறான். அவனை மட்டம் தட்ட அவன் வயது வாண்டுகள் முயற்சி செய்கின்றன. அந்த முயற்சியில் தோற்று, அவனுடன் அனைவரும் சேர்ந்து சென்று குப்பையைத் தொட்டியில் கொட்டுகின்றனர்.
எந்த ஒரு நல்ல பணியையும் தொடர்ந்து செய்தால், மாறுபட்ட கருத்துள்ளவர்களும்கூட நம் பின்னே வருவர் என்ற கருத்தை மிக அருமையாகவும், அழுத்தமாகவும் இக்குறும்படம் பதிவு செய்துள்ளது. இயக்குநரைத் தவிர ஏறக்குறைய மற்ற அனைவருமே பள்ளி மாணவர்கள் என்பது வியப்பான செய்தி. இதை youtube-இல் இதே தலைப்பில் பார்க்க முடியும்.