காலையில் நாம் சாப்பிடும் முதல் உணவைத்தான் ‘ப்ரெய்ன் ஃபுட்’ என்று சொல்கிறார்கள். இரவு உணவிற்கும் மறுநாள் காலை உணவுக்குமான இடைவெளி 8 மணி முதல் 12 மணி நேரம். இந்த நேரங்களில் விரதம் போன்ற நிலையில் இருக்கிறோம். அதனால்தான் ஆங்கிலேயர்கள் ‘break fast’ என்று காலை உணவை அழைத்தார்கள். அதாவது விரதத்தை உடைப்பது.
எல்லா வயதினருக்குமே காலை உணவு மிக முக்கியம். காலை உணவை சரிவர சாப்பிடாமலோ, தவிர்க்கும்போதோ ஒருவரின் இயல்புத் திறன் பாதிக்கப்படும். காலை உணவான இட்லி, தோசை, சட்னி, சாம்பார், பொங்கல், உப்புமா வகை சிறந்தது. இந்த வகை உணவில் குறைந்த கொழுப்புச் சத்தும், நிறைந்த புரோட்டீனும் உள்ளது.
காலை உணவு ஒர் அரசனைப் போலவும், மதிய உணவு ஒரு மந்திரியைப் போலவும், இரவு உணவு ஒரு சேவகனைப் போலவும் இருந்து விட்டால் மனிதனின் ஆரோக்கியம் எப்போதும் சீராகவே இருக்கும்.