நீர் எரிப்பு.
பொதுவாக மக்கள் இறந்தால் பிணங்களைப் புதைப்பது அல்லது எரிப்பது என்கிற இரண்டு முறைகள்தான் இதுவரை நடைமுறையில் உள்ளன. ஆனால், அமெரிக்காவில் தற்போது 3ஆவது முறையாக ஒருமுறை நடைமுறைக்கு வந்துள்ளது (திவீக்ஷீமீ tஷீ ஷ்ணீtமீக்ஷீ னீமீtலீஷீபீ) நீர் எரிப்பு.
இதற்காக ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மனித உடலிலுள்ள புரதம், கொழுப்பு, குருதி போன்றவற்றை அழித்து காபி நிறத்தில் ஒரு நீர்மமாக மாற்றிவிடுகிறது. தூளாக்கப்பட்ட எலும்புகளும் பல் போன்ற மற்ற உலோகம் போன்ற பொருள்களுமே எஞ்சி நிற்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை தற்போது பெரும்பாலான குடும்பங்களால் கோரிப் பெறப்படுகிறது.
இதனால் புதைகுழி தோண்டுகிற செலவும், புதைப்பதற்கான இடப் பற்றாக்குறையும் நீக்கப்படுவதோடு எரிப்பதற்காக ஏற்படும் செலவும் குறைக்கப்படுகிறது.
இந்த இயந்திரத்தில் ஒருவித காரம், உப்பு (பொதுவாக சோடியம் ஹைட்ராக்சைட், பொட்டாசியம் ஹைட்ராக்சைட், தண்ணீர் ஆகியவை கலந்த கலவை பயன்படுத்தப் படுகிறது. இதை ‘ரயான் கட்டோனி’ என்ற பிணவறைப் பள்ளிப் பட்டதாரி தெரிவிக்கிறார்.