தலைப்பு: நவோதயா கல்வித்
திட்டம் கூடாது ஏன்?
ஆசிரியர்: கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு
வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
பெரியார் திடல், சென்னை-600 007.
பக்கங்கள்: 16 விலை: ரூ.10/-
நீண்ட காலம் கல்வித் துறையில் பணியாற்றி கல்வியை அனைத்து மக்களுக்கும் பரவலாக்கம் செய்ததில் பெரும்பங்கு வகித்தவரான கல்விநெறிக் காவலர் நெ.து.சு. அவர்கள் 1986இல் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் ஆற்றிய உரையின் நூல்வடிவம்.
நவோதயா கல்வி முறை தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்பதை விளக்குகிறது.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி மட்டும் உயர்தரத்தில் அமைப்பது குடிசைகளுக்கு மத்தியில் ஓர் அரண்மனை கட்டுவது போன்றதாகும் என்பதை விளக்கி, சமமான கல்வியை நோக்கி தமிழ்நாடு செல்லவேண்டிய நிலையில் நவோதயா கல்வித் திட்டம் புதிதாக ஒரு பேதத்தை உருவாக்கி வசதி படைத்தோருக்கு மட்டும் உயர்தரக்கல்வி அளித்து, உயர்தரக்கல்வி பெரும் புதிய வர்க்கத்தை உருவாக்கும் என்பதை விளக்கி, அந்தத் தொகையைக் கொண்டு அனைத்துப் பள்ளிகளையும்