ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அப்புத்தகத்தின் சக வாசகர்களுடன் அதுபற்றி விவாதித்தால்தான் வாசிப்பு அனுபவம் முழுமையடையும். இந்தச் செயலியில், புத்தகப் புழுக்கள் தாங்கள் படித்த, ரசித்த புத்தகம் தொடர்பான குழு முன்பே இருப்பின் அக்குழுவில் சேர்ந்து கருத்துத் தெரிவிக்கலாம்.
ஒருவேலை அக்குழு முன்பே இல்லை எனில் அப்புத்தகம் தொடர்பான புதிய குழுவை உருவாக்கிக்கொண்டு அதுபற்றி விவாதிக்கலாம். இந்தக் குழுவில் சேருமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நாம் விவாதிக்க விரும்பும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு கருத்து சொல்ல அழைக்கலாம். ஒவ்வொரு புத்தகத்தின் பின்னும் ஒரு குழு இருக்கிறது என்பதைச் சாத்தியமாக்க விரும்புகிறது இந்தச் செயலி.
இப்போதைக்கு அய்போனுக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டிலும் வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஆன்டிராய்டுவாசிகள்.
http://booktribes.us/