பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தவர்.
இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் சட்டம் பயின்று கோவையில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி சாரதாமணி மற்றும் மகள் உமா, மகன்கள் செந்தில், குமார் ஆகியோர் உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் வாய்ந்தவர். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமையகச் செயலாளராகவும் இருந்தார். இவர் மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார், பாவேந்தர் பெரியார், குமரன் ஆசான், சாகு மகராஜ், ஈழத் தமிழர் உரிமைப் போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், நிஷீக்ஷீணீ’s றிஷீsவீtவீஸ்மீ கிtலீமீவீsனீ ணீஸீபீ திக்ஷீமீமீ ஷ்வீறீறீ, ஜிலீவீக்ஷீuஸ்ணீறீறீuஸ்ணீக்ஷீ ஷீஸீ றீமீணீக்ஷீஸீவீஸீரீ, ளீஸீஷீஷ்றீமீபீரீமீ ணீஸீபீ ஷ்வீsபீஷீனீ வைக்கம் போராட்டம் _- ஓர் விளக்கம் உள்ளிட்ட எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
குமரன் ஆசான்பற்றி அவர் எழுதிய நூல் பல பதிப்புகள் வந்துள்ளன. அவர்பால் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணசாமி ஆசான் என்ற பெயரை பிறகு சூட்டிக் கொண்ட எழுத்தாளர். உலகப் புகழ் பெற்ற நூலான ரிச்சர்ட் டாக்கின்சின் “ஜிபிணி நிளிஞி ஞிணிலிஹிஷிமிளிழி” நூலை தமிழில், கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர்.
விடுதலை நாளிதழ், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்.
திருச்சியில் இயங்கி வந்த பெரியாரியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் திராவிடர் இயக்கம், திராவிடர் வரலாறு ஆகிய பொருள்களில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தியவர்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை மய்யத்தின் பாடத் திட்டக் குழுவில் உறுப்பினர். பெரியாரியத்தைப்பற்றிய கைலாசம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகப் பெரியார் பேருரையாளர் என்ற விருது பெற்றவர். தமிழ், தமிழர் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்; தடுப்புக் கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு ஆள்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.