“வீதியில்
கண்ணை மூடிக்கொண்டு
போகிறாயே
அறிவில்ல…’’
காரோட்டி.
“காலை மிதிக்கிறாயே
அறிவில்ல’’
பேருந்தில் பயணி.
“புளிமூட்டை மாதிரி
சுமந்து கொண்டு
வழியில் நிற்கிறாயே
அறிவில்ல…’’
தொடர்வண்டியில்.
“வரிசை கட்டிப்
போறீங்களே
வண்டிகள்
எப்படிப் போறது?
அறிவில்ல… ‘’
வீதியில்.
இப்படிப் போகுமிடமெல்லாம்
அறிவில்ல, அறிவில்ல
என்ற பாட்டே…
ஆனால்,
இவர்களை
சூத்திரன்
தேவடியாள் மகன்
தாசி மகன்
வேசி மகன்
பார்ப்பன அடிமை
என்றும்
நீ, தீண்டக் கூடாதவன்
பார்க்கக் கூடாதவன்
நெருங்கக் கூடாதவன்
என்றும்
இழிவு செய்யும்
வேதம் சாஸ்திரம்
புராண இதிகாசங்களையும்
அவற்றை எழுதிய
ரிஷிகளையும்
கடவுள்களையும்
அந்தக் கடவுள்களின்
கடவுளச்சிகள்
வைப்பாட்டிகள்
பிள்ளை குட்டிகளின்
கல் பொம்மைகள்
உள்ள கோயில்களுக்குச் சென்று
அவைகளுக்கு
பூ பழம் தேங்காய்
கற்பூரம் கொண்டு
பார்ப்பானிடம் கொடுத்து
தீப தூபம் காட்டி
எவனுக்கு
அடிமை என்று சொல்லப்பட்டானோ
அவன்
பிச்சைத் தட்டில்
பணத்தைக் கொட்டி
கும்பிட்டு
சாம்பல், குங்குமத்தை
கையேந்தி வாங்கி
நெற்றியில்
பட்டை, பொட்டு
நாமம் போட்டு
கழுத்தில் கொட்டை
கையில் வண்ணக்
கயிறுகள் கட்டி
நான்
தேவடியாள் மகன்
தாசி மகன்
வேசி மகன்
பார்ப்பன அடிமை
தீண்டக் கூடாதவன்
பார்க்கக் கூடாதவன்
நெருங்கக் கூடாதவன்
தான் என்று
ஏற்பதில் மட்டும்
இவர்களுக்கு
மானம் வெட்கம்
சூடு சொரணை
சுயமரியாதை பகுத்தறிவு
எள்ளளவாவது
இல்லாமல் போவதேன்?
– பொன்.இராமசந்திரன்