ஹிந்து மதத்திற்கு எதிரான லிங்காயத்துகளின் முழக்கம் நியாயமே!

அக்டோபர் 16-31

 

 

அண்மை மாநிலமான கருநாடக மாநிலத்தில், தற்போது பா.ஜ.க.வினர் _ ஹிந்துத்வாவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பது, லிங்காயத்துகள் என்ற கணிசமான பிரிவினர். இவர்கள் பசவண்ணரின் சிந்தாந்தத்தைப் பின்பற்றி தனித்தன்மையோடு இருந்து வருபவர்கள்.

வீரசைவர்களோடு சேர்த்து ஹிந்துமதத்தவர் என்று தாங்கள் அழைக்கப்படுவதை லிங்காயத்துகள் எதிர்த்து, ஒருவகை ‘மதப் புரட்சியை’ நடத்தி, போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.
“நாங்கள் ஹிந்துக்கள் அல்ல; எங்கள் மதம் தனி; எனவே, எங்களது தனித்தன்மையை ஏற்று தனி மதமாக அங்கீகரியுங்கள்” என்று கோரியுள்ளனர்.

இது புதிதல்ல; இக்கோரிக்கை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது; அவ்வப்போது கூக்குரல் எழும்பும்போது அதை எப்படியோ அடக்கி விடுவதில் _ சமரசம் செய்து கொள்வதில் ஹிந்துத்துவாவாதிகளான சனாதன வேதியர்கள் வெற்றியே பெற்று வருகின்றனர்!

வெள்ளைக்காரர்கள் _ பிரிட்டிஷ்காரர்கள் ‘ஹிந்து லா’ என்ற இந்துக்களுக்கான தனிச் சட்டத்தை (றிமீக்ஷீsஷீஸீணீறீ லிணீஷ்) உருவாக்கியபோதே, ஹிந்து மதம் என்ற ஒன்றில் உள்ள பலவீனங்களைப் புரிந்துகொண்டே,  ஆரியப் பார்ப்பனர்கள், பிரச்சாரத் தந்திர வியூகங்களால், பலவீனத்தையே பலம் போன்று காட்டி, சித்தரித்து வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மற்ற கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள் ‘சமணம்’, ‘பவுத்தம்’ ஆகிய மதங்கள் எல்லாம் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பதற்குரிய வரலாறும் சான்றுகளும் கால நிர்ணயங்களும் உண்டு; ஆனால், ‘ஹிந்து’ மதம் என்ற பெயரை _ அந்நியர்களான வெளிநாட்டவர் வந்த பிறகு தந்த பெயர். இதை காஞ்சி சங்கராச்சாரியர் சந்திரசேகரேந்திரரே _ ‘தெய்வத்தின் குரல்’ நூலில் ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளார் _ அதற்குமுன் அது

வேத மதம்,

சனாதன மதம்,

வைதீக மதம்

என்றே அழைக்கப்பட்ட மதமாகும்.

இதை மைக்கேல் க்ஷிs. வெங்கடேசுவரன் (65 லி.கீ.108) சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ்பெற்ற
தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.வி.இராஜமன்னார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்:

“When I speak of Hinduism, I am actually conscious of the vague connotation of that word:
“Hinduism is not a religion in the sense in which we now understand the word. The word is not Indian in origin; nor was it ever used by the Hindus as the same name of their religion”.
But the word has come to stay and convenience requires that the word should be retained to describe a typical mode of life inclusive of religion and philosophy in the strict sense of those terms.”

இதன் தமிழாக்கம்:

“நான் இந்து மதம் பற்றிப் பேசும்போது அந்த வார்த்தையின் தெளிவற்ற பொருளைப் பற்றி எச்சரிக்கையுடனே இருக்கிறேன்.

நாம் தற்போது அவ்வார்த்தையைப் புரிந்து கொண்டிருக்கின்ற தன்மையில் அது ஒரு மதமல்ல. அது இந்திய மூல வார்த்தையுமல்ல. இந்துக்களால் அவர்களுடைய மதத்திற்கான ஒரே பெயராகவும் எப்போதும் உபயோகப் படுத்தியதுமில்லை.’’

ஆனாலும், மதம், தத்துவங்கள், அது குறிப்பிட்ட வாழ்வியலை விளக்கத் தேவைப்படும் சொல்லாக ‘இந்து’ என்ற சொல் ஆளப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டுள்ளது.’’

அது மட்டுமா?

இப்படிப்பட்ட மதத்தை நிறுவியது அனாதி காலந்தொட்டாம்! என்னே அடாவடித்தனம்!

நிறுவியர் எவர் என்றே தெரியாததே அதன் தனித்தன்மையாம்! பலமாம்!! என்னே விசித்திரம்!

இந்திய மொழிகளில் _ சமஸ்கிருதம் உட்பட எதிலும் இந்த ‘ஹிந்து’ என்ற சொல்லே மூலச்சொல்லாகத் தேடினாலும் கிடைக்காது என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பிலேயே தெளிவாகப் பதிவு செய்து விட்டார்!

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்கேற்ப இதற்கு நெளிவு சுளிவுடன் அவ்வப்போது சமயத்திற்கேற்றார்ப்போல வியாக்யானம் செய்து கொண்டதோடு, எதிர்த்துக் கொடி தூக்கிய, தனி மதம் – வழி காண பிரிந்து வெளியேறி இதற்கு எதிராகக் கிளம்பியவர்களை, எதிர்த்தும், பிறகு அணைத்தும் அழித்துவிடும் “அற்புதமான வேலைகளில்’’ ஈடுபட்டு இதுநாள்வரை _ தமது தந்திரம், சூழ்ச்சித் திறத்தினாலே வெற்றியும் பெற்று வருகின்றனர்!

ஆரிய சனாதன மதத்தைவிட்டு வெளியேறியவர்கள் _ அதை எதிர்த்தவர்களின் கொள்கைகள் வெகு மக்களிடையே செல்வாக்கும் வெற்றியும் பெறும்போது, அதைச் சிதைத்து, அவர்களின் கொள்கைகளைத் தாங்கள் எடுத்துக்கொண்டு, தங்கள் செல்வாக்கை ஆரிய சனாதனிகள் வளர்த்து வருகின்றனர்!

எடுத்துக்காட்டாக, சனாதன வேத மதமான ஆரியப் பார்ப்பன மதத்தின் அடிப்படைகளான யாகம், வர்ணாசிரமம், ஆத்மா, பெண்ணடிமை, சுதந்திர சிந்தனை மறுப்பு போன்றவற்றை  அம்பலப்படுத்திட மக்கள் மொழியான ‘பாலி’யில் வெற்றிகரமாகப் பரப்பி _ உலக அளவில் பரவிய உன்னத புத்த நெறியை பிளவுபடுத்தி, இந்தியாவை விட்டு விரட்டியதோடு, எஞ்சிய கொள்கைகளையே தமதாக்கிச் சொந்தம் கொண்டாடி, புத்தரையே ஹிந்துக் கடவுளான

மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் 9ஆவது அவதாரமாக்கி -_ முடக்கி இந்து மதத்திற்கு உள்ளே வைத்து விட்டதில் வெற்றி பெற்றனர்!

(டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் போன்ற தத்துவம் பேசிய பார்ப்பனர்களே இதைப் பரப்பினர்)

“தீண்டப்படாதவர் யார்? ஏன் அப்படி அவர்கள் ஆக்கப்பட்டார்கள்?’’ என்ற தலைப்பில்  (“Who are the untouchables? How they are untouchables?”) என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதியுள்ள ஆய்வு நூலில், புத்தர் நெறி பரவிய பின்னரே, ஆரியர்கள்,  தங்களை இறைச்சி உண்ணாத, காய்கறி உண்ணுபவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள் என்பதை, ஆதாரப்பூர்வமாக ஒரு தனி அத்தியாயமே எழுதி விளக்கியுள்ளார்கள்!

“To my mind, it was strategy which made the Brahmins give up beef-eating and start worshipping the cow. The clue to the worship of the cow is to be found in the struggle between Buddhism and Brahmanism and the means adopted by Brahmanism to establish its supremacy over Buddhism.

The strife between Buddhism and Brahmanism is a crucial fact in Indian history. Without the realisation of this fact, it is impossible to explain some of the features of Hinduism. Unfortunately students of Indian history have entirely missed the importance of this strife. They knew there was Brahmanism. But they seem to be entirely unaware of the struggle for supremacy in which these creeds were engaged and that their struggle, which extended for 400 years has left some indelible marks on religion, society and politics of India.

This is not the place for describing the full story of the struggle. All one can do is to mention a few salient points. Buddhism was at one time the religion of the majority of the people of India. It continued to be the religion of the masses for hundreds of years. It attacked Brahmanism on all sides as no religion had done before.

Brahmanism was on the wane and if not on the wane, it was certainly on the defensive. As a result of the spread of Buddhism, the Brahmins had lost all power and prestige at the Royal Court and among the people.

They were smarting under the defeat they had suffered at the hands of Buddhism and were making all possible efforts to regain their power and prestige. Buddhism had made so deep an impression on the minds of the masses and had taken such a hold of them that it was absolutely impossible for the Brahmins to fight the Buddhists except by accepting their ways and means and practising the Buddhist creed in its extreme form.”

    (b)    any child, legitimate, or illegitimate, one of whose parents is a Hindu, Buddhist, Jaina or Sikh by religion and who is brought up as a member of the tribe, community group or family to which such parent belongs or belonged; and

    (c)    any person who is a convert or reconvert to the hindu, Buddhist, Jaina or Sikh religion.

A person will be a Hindu for purposes of this Act, if he satisfies the above definition, though he isnot a Hindu by religion.”

இதன் தமிழாக்கம்:

‘இந்து’ எனப்படுபவர் யார்?

இந்து திருமணச் சட்டத்தின் விதி 2இன் படி:

இந்து திருமணச் சட்டம் கீழ்க்காணும் நபர்களுக்குப் பொருந்தும்.

அ)    ‘இந்து’ என மத அடிப்படையில் அதன் எந்த வடிவிலும் விரிவாக்கத்திலும் குறிப்பிடப்படும் எந்த நபருக்கும் பொருந்தும். வீரசைவர், லிங்காயத்து, பிரமோ சமாஜ், பிரார்த்தனா சமாஜ் அல்லது ஆரிய சமாஜ் பிரிவினைச் சார்ந்த எந்தவொரு நபருக்கும்.

ஆ)    பவுத்தம், ஜைனம் அல்லது சீக்கியம் என மத ரீதியாகக் குறிப்பிடப்படும் எந்தவொரு நபருக்கும்.

இ)    முஸ்லீம், கிறிஸ்தவர், பார்ஸி அல்லது யூத மதத்தினைச் சாராதவராக, இந்தச் சட்டம் (இந்து திருமணச் சட்டம்) நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்த இந்து சட்டங்களுக்குக் கட்டுப்படாத மரபு ரீதியாகவோ வழக்கத்தாலோ, இந்து சட்ட விதிகளுக்குள் உட்படுத்தப்படாதவராக உள்ள எந்த ஒரு நபருக்கும் பொருந்தும்.

விளக்கம்: அடியிற் குறிப்பிடப்பட்ட நபர்கள் இந்துவாகவோ, பவுத்தராகவோ, ஜைனராகவோ அல்லது சீக்கியராகவோ கருதப்படுவர்.

அ)    இந்து, பவுத்தம், ஜைனம், சீக்கிய மதத்தினரான பெற்றோர்களுக்கு சட்டத்துக்கு உட்பட்டோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ பிறந்த, எந்தவொரு குழந்தை

ஆ)    இந்து, பவுத்தம், ஜைனம், சீக்கிய மதத்தினரான பெற்றோர்களுக்குப் பிறந்த, மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு உரிய பழங்குடி, சமுதாய வகுப்பினர் குழுவில் அல்லது குடும்பத்தில் வளர்ந்த, சட்டத்துக்கு உட்பட்டோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ பிறந்த எந்தவொரு குழந்தை.

இ)    இந்து, பவுத்த, ஜைன அல்லது சீக்கிய மதத்திற்கு மாறிய, திரும்பிய எந்தவொரு நபர்.

மேற்குறிப்பிட்ட வரையறை விதிக்குள் அடங்கிய மத அடிப்படையில் இந்துவாக இல்லாத எந்தவொரு நபரும் இந்து திருமணச் சட்டத்தின்படி ‘இந்து’வாகவே கருதப்படுவர்.

இப்படி பரந்து, விரிந்துபட்ட பலவற்றை தனது ஒரே மதக் குடைக்குள் கொண்டுவந்து ஒற்றைத் தனி மதமாக்குவதற்கு அவர்கள் ஒவ்வொரு பிரிவினரும் அவ்வப்போது எதிர்ப்புக் குரல் _ கலகக் குரல் தந்தாலும் அதனை அடக்கி  

ஒடுக்கி ஓயச் செய்வதில் இதுவரை பார்ப்பனீயம் _ ஆரியம் வெற்றி பெற்றே வந்துள்ளது.

அவ்வாறு எதிர்த்து வருபவர்களுள் ஒரு பிரிவினரான லிங்காயத்துகள் இப்போது சக்திவாய்ந்த கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர்!

2018ஆம் ஆண்டு வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் கர்நாடக லிங்காயத்தினர் கட்டுப்பாடாக பா.ஷ.கவிற்கு எதிராக ஒரே அணியில் எதிர்த்து வாக்களித்து, பா.ஷ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்காமல் தடுத்தால், அவர்கள் இம்முயற்சியில் பெரு வெற்றி பெற்றவர்களாவார்கள்.

வங்கத்தில் விவேகானந்தர் உருவாக்கி நிலைத்துள்ள ‘ராமகிருஷ்ண மிஜன்’ என்ற அமைப்பு, உலகெங்கும் கிளைகள் அமைத்து இயங்கி வருவது அனைவரும் அறிந்தது. இவர்கள் உச்சநீதிமன்றத்தில், “தாங்கள் ‘ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல, தங்களை தனி மதப் பிரிவாகக் கருதி பதிவு செய்தல் வேண்டும்’’ என்று வாதாடி வெற்றி பெற்றுள்ளார்கள். இது பலரும் அறியாத முக்கியமான செய்தியாகும்.

எனவே, கர்நாடகாவில் தொடர்ந்து ஒலித்து, தற்போது தீவிரமான போராட்டக் குரலாக மாறியிருக்கும் லிங்காயத்துகளின் புரட்சிக் குரலும் வெற்றி பெறும் _ பெறவேண்டும்!

வாஜ்பேயி பிரதமராக இருந்த 90களில் சீக்கியர்கள் தாங்கள் தனி மதத்தவர், ஹிந்துக்களில் ஒரு பிரிவினர் அல்லர் என்று கிளர்ச்சி நடத்தினர். அதற்கு அவர்களுக்கு அமைச்சர் எல்.கே.அத்வானி அவர்கள் ஏதேதோ சமாதானம் கூறினார் என்பதும் பலரும் மறந்துபோன முக்கிய வரலாற்று நிகழ்வாகும்!

ஆரிய சனாதன மதத்தைவிட்டு அகன்று சென்று, தனித்தனி மதத்தினராக இருப்பவர்களை, அவர்கள் ஏற்காமலே அவர்களும் இந்துக்கள் என்று சேர்த்துக்காட்டும் ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியான சதிகளை விரித்தால் தனி நூலாகவே விரியும் என்பதால், இக்கட்டுரையின் நோக்கத்திற்குத் தேவையானவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

குறிப்பு: இக்கட்டுரையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டுள்ள லிங்காயத்துகள் பற்றிக் கூடுதலாய் அறிய உதவியாய் இருக்கும் என்பதால், கர்நாடகத்தில் அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கருத்துரிமைப் போராளி கவுரி லங்கேஷ் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளோம். அதையும் படித்துப் பயன் பெறுக.

– கி.வீரமணி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *