நடிகவேள். எம்.ஆர்.இராதா

செப்டம்பர் 16-30

தந்தை பெரியார் இதயத்தில் உயரிய இடம் பிடித்த காரணத்தால் தந்தை பெரியார் தலைநகரில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் அமைத்தார். கலையை மக்கள் மனதில் மண்டிக் கிடந்த களைகளை அகற்றப் பயன்படுத்தினார்.        

தனித்துவமான நடிப்பாற்றலும் படைப்பாற்றலும் பெற்றவர். அவரது நாடகங்களைக் கண்டு ஆத்திகம் அலறியது; ஆட்சிகள் மருண்டன. அவருக்காகவே நாடகக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடக வசனங்களை முன் கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம்  காவல்துறை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அச்சட்டம் கட்டுப்பாடு விதித்தது. அவர் நாடகங்கள் நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

(நினைவுநாள்: 17.09.1979)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *