காஜியாப்பூர் என்பது பீகாரின் தென் நவாடா மாவட்டத்தின் ஒரு கிராமம். இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் வசதி படைத்தவர்கள். இந்தக் கிராமத்தில் உள்ள 200 குடும்பங்களிலும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள், அறை குளீரூட்டுக் கருவிகள், குளியலறையில் நீர் சூடேற்றும் சாதனங்கள் ஆகியவை இருகின்றன. பல வீடுகளில் கார்களும் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், ஒரு வீட்டில்கூட கழிவறை (கக்கூஸ்) வசதி கிடையாது. வீட்டிலுள்ளோர் ஆண், பெண் அனைவரும் காலை வேளைகளில் கையில் ஒரு செம்பிலோ, வாளியிலோ தண்ணீர் எடுத்துக்கொண்டு வெட்டவெளியை நோக்கிச் சென்றுதான் தங்கள் காலைக் கடன்களை முடித்துக் கொள்கின்றனர். கிராமப் பஞ்சாயத்து இதற்கென பெண்களுக்குத் தனியாகவும், ஆண்களுக்குத் தனியாகவும் பஞ்சாயத்து புறம்போக்கு இடத்தில் இடம் ஒதுக்கியுள்ளது.