டைப் 2 (Type 2) சர்க்கரை நோய்தான் மிக அதிகமானவர்களை பாதிக்கிறது. இந்த நோயுள்ளவர்கள் சர்க்கரையின் அளவையறிய ஊசியால் குத்தி குருதி எடுத்து சோதனை செய்ய வேண்டியுள்ளது. ஊசியால் குத்தப்படும் தொல்லையினின்று விடுபட்டுவிட தற்போது ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உடலில் அணிந்துகொள்ளக் கூடிய ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவரும் உள்ளார். இந்தக் கருவியை உடலில் அணிந்து கொண்டால் அது நம் உடலின் வியர்வையிலிருந்து கோர்டிசால் (Cortisol), குளுகோஸ் (Inter (Glucose) இன்டர்லியூகின்-6 (Inter leukin-6) என்ற கூட்டுப்பொருள்களை கண்டு பிடித்து அதன் அளவுகளை தெரியப்படுத்துகிறது.
இன்று பயனில் உள்ள முறைகள் அன்றன்று உள்ள இரத்தச் சர்க்கரையின் அளவைதான் சொல்லும். ஆனால், இந்தக் கருவி ஒரு வாரத்தில் இரத்தச் சர்க்கரையின் ஏற்றத் தாழ்வுகளைச் சொல்லக் கூடியதாகும். இப்படி உடலில் அணியும் இரத்தச் சர்க்கரையை அளவிடும் கருவியை நாங்கள்தான் முதன்முதலில் கண்டு பிடித்துள்ளோம் என்று டெக்ஸாஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘ஷாலினி பிரசாத்’ பெருமையுடன் குறிப்பிடுகிறார்.