இந்து முக்காலி

ஜூலை 16-31

சகிப்பு என்னும் கொள்கை ஒரு சமுதாயம் எந்த அறக்கோட் பாட்டைப் பின்பற்றுகிறது என்பதைப் பொறுத்தது. இத்தகைய சமுதாயம்; நன்கு நிறுவப் பெற்ற சமூக அறத்தைப் பின்பற்றும் ஒரு சமுதாயம், தெளிவாக இது – செய்க, இது – செய்யற்க என்று கற்பிக்கப்பட்ட வேறு ஒரு சமுதாயத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள இதனால் இயலாது.

வேறு அல்லது மாறுபட்ட கோட்பாடுகளை யுடையாரை ஏற்றுக்கோடல் கடினமான செயல்; (அவ்வாறிருப்பின் அது அசிரத்தையையே காட்டும் (மொ_-ர்_-1) ஒருவற்குச் சில கொள்கைகளில் கெட்டியான பிடிப்பு இருக்கு மாயின் அதனை வன்முறையைப் பயன்படுத்தி யேனும் இருத்திக் கொள்வரேயன்றி விட்டுக் கொடார். இவர்களுக்கும் சகிப்பு இராது; அத்தகைய பிடிப்பும் ஈடுபாடும் இல்லாதவர்க்குச் சகிப்பு இயலும். இந்துவின் சமுதாய நோக்குகள் சமயத் தத்துவங் களாலோ அன்றி சம்பிரதாய சமயச் சடங்குகளாலோ தீர்மானிக்கப் படுகின்றனவே அன்றி, அறம் (Ethics), நல்லொழுக்கம் (புத்தர் கூறியாங்கு) என்பவை முற்கூறியவற்றோடு முரணாகாவாயின் மட்டும் கருதப்படும்; இன்றேல் இல்லை; அதாவது மனித ஒழுக்கம், நன்னடத்தையால் நிர்ணயிக்கப் படுமாயினும் அதுவும் சமயத்தோடு முரண்பட்டால், பின் வாங்கிவிடும். அறக்கோட்பாடுகளுக்கு வரையறுத்த உண்மையே வாய்மை. அவை முற்றிலும் உலகியல். சூழ்நிலையில்தான் நேர்மையுறும், ஆனால் அவை பயனற்றவையும் குறைந்த அளவு புனிதமானவையுமாம். முந்தியவை தற்காலிக மானவை, ஆனால் பிந்தியவை அண்டம் நிறைந்து காலாதீத மானவை. இவ்வாறு இந்து மதம், பௌத்தம் முதலிய நல்லொழுக்க மதங்களினின்றும் வேறுபட்டது. ஒழுக்க வேறுபாட்டுத் தன்மை எப்போதும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறது. இந்து மதத்தில் யாவற்றிற்கும் மேலான ஒழுக்க நெறியொன்றில்லை. ஆன்மிக ஆசைகள் உண்டு; அவற்றைப் பெறப் பல வழிகள் வகுக்கப்பட்டன.  ஆதலால் தான் சகிப்பு என்பது இந்துவுக்குப் பெரிதாகவும் இயல்பாகவும் வருகின்றது.

ஏனையோரைப் போல இந்துக்களுக்கும் நல்லது, தீயது என்னும் வேறுபாட்டுணர்ச்சி யுண்டு. அவர்கள் நல்லதை ஏற்றுக் கொண்டு, ஊக்கி, முயன்று செய்து தீதை ஒழிக்க முயல்வர். ஆனால் நன்றும் தீதும் வெவ்வேறு வகைகளில் தீர்மானிக்கப்படு கின்றன; அவை (இறைவனால்) தோற்று விக்கப்பட்ட சில மதிப்புக் களை ஏற்றுக் கொள்ளப்படுவன. அவை அறிவு சான்றவை யாகவோ மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டவை யாகவோ இரா. சாதாரணமாக மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாத வர்ண தர்மம் போன்றவற்றை இந்துக்கள் ஏற்பர். எஞ்ஞான்றும் நல்லது என்று பிறர் உறுதியாக நம்பும் சிலவற்றில் இந்துவுக்கு நம்பிக்கையில்லை. உதாரணமாக இந்துச் சமுதாயத்தில் நிலவிவரும் சில பழக்க வழக்கங்கள்.

சாதாரணமாக நிறுவப்பட்ட சமயங்கள் தாம் அவற்றினின்றும் வேறுபடுவனவற்றைத் துன்புறுத்துவர். பிரிந்து போகும் உப மதங்கள் (மதப்பகைகள்) அப்பிரிவினையினாலேயே பழைய பெரிய மதத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன. ஆதலால் பிரியும் உப மதங்கள் சகிக்கலாம்; ஆனால் பெரிய மதங்கள் அங்ஙனம் சகிக்க இயலாது; ஆதலால் அவை துன்புறுத்துகின்றன; சில மதங்கள் தங்கள் வாழ்வே ஆபத்திற்குள்ளாகும் போது மட்டும் துன்புறுத்தும். பெரும்பாலும் கீழ்க் கூறும் நிலையில் அரசு குறுக்கிட்டுத் துன்புறுத்தத் தொடங்கும். பொதுவாகக் கீழ்க்காணும் நிலையில் அரசே சமயத் துன்புறுத்தலை மேற்கொண்டு விடுவதுண்டு, அரசன் தெய்விகனானால் (அரசனைத் தெய்வத் திற்குச் சமமாக மக்கள் கருதினால்) உலகியல் நலன்களைவிட வீடு பேறடைதல் முக்கியமானது என்று கருதினும், ஒருவனது வீடு பேறு உலகியல் நலன்களினும் முக்கியமானது என்று கருதப்படின், பிறகு தனது குடிமக்கள் வீடு பேற்றினை எவ்வளவு பெற முடியுமோ அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் அரசனது கடமையாகிறது. அதாவது தனது குடிமக்களைப் பிற மதக் கோட்பாடுகளை மேற்கொள்ளுதலைத் தடுத்தல் அவனது கடமையாகின்றது.   இத்தகைய சமயத் துன்புறுத்தற் கோட்பாடு இந்துக்களிடையே இருந்திருப்பின், அவர்களுடைய அரசர்கள் பலகாலும் பிற மதத்தினரை வருத்தியிருப்பர்.

ஆனால் அவ்வரசர்களுக்குத் தங்கள் சமுதாயத் திட்டம் பிறர் தாக்கத்தால் உடைந்து போய்விடக் கூடாதே என்பது தான் பெரிய கவலையா யிருந்ததேயேயன்றி தங்கள் தத்துவங்கள் தாம் ஏனையவற்றை விடச் சிறந்தவை என்று நிரூபிப்பது அத்துணை அவசியமாகத் தோன்றவில்லை. இந்த அரசன் கடமைகளில் ஒன்று வர்ணாசிரமதர்மம் தகர்ந்து போகாமல் காத்தல். கௌடில்யரும் ஸ்மிருதிகளும் இவ்விஷயத்தில் ஐயத்திற்கு இடமின்றிக் கூறியுள்ளனர்.

வர்ண சங்கமம் (பல வர்ணக் கலப்பு) காக்கத் தவறிய வேனன் என்னும் அரசன் தெய்வத்தின் கோபத்திற் காளானான். ஏனையவற்றிற்கு ஆபத்து வருமாயின் அரசன் அவ்வளவு பதறமாட்டான். சமயத் துன்புறுத்தல் நிகழ்தற்குக் காரணம்; ஆதிக் குடிகள் பிற கடவுளரிடம் காட்டும் பொறாமை, மற்றும் வேண்டப்படாத மேலுலகங்கள், யாவற்றிற்கும் இடம் கொடுக்கும் பரந்த சமய ஏற்பாட்டில் இவற்றிற்கு இடமில்லை. ஆகவே இந்து மன்னனின் முக்கிய கடமை வர்ணாசிரம தர்மத்தைக் காப்பதும் அதற்கு ஆதரவு தரும் சாத்திரங்கள் கூற்றை மேற்கொள்ளுதலுமேயாம்.

இந்துக்களிடையே தர்மம் மக்கள் வாழ்க்கையிலும் கூட அரசன் செயல்களில் கூட பின்னப்பட்டுக் கிடக்கும், தர்மத்தை எதிர்ப்பது பாவம் சமய விரோதம் மற்றும் குற்றம்; அன்றியும் அது ராஜத் துரோகமும் ஆகும்; அரசன் பால் வன்மை, சட்டம், அரசியல் அதிகாரம் யாவையும் நின்றன. ஆதலால் சாதியைவிட்டு நீக்கல், சமயப் பிரஷ்டம் முதலியன அதிகமாக நிகழவில்லை. நாடு புறத்தார் ஆட்சியின் கீழ்வந்தபோது இப்பாதுகாப்பு நீங்கிற்று.

சமுதாயம் தன் தர்மத்தைக் காத்துக் கொள்ளத்தானே வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது இந்து மதத்தின் ஒற்றுமை மறைந்தது. ஒத்து வராத பிற சமயங்களினின்றும் நீங்கல், சாதி மற்றும் குடும்பக் கட்டுப் பாட்டை மேலும் இறுக்குதல், வெளிப்படையான பகைமை-களிலும் போர்களிலும் ஈடுபடுதல் இன்று; சமய வேறுபாட்டை இந்து எப்படிச் சகித்துக் கொண்டான் என்பது அவன் புறத்தார் தாக்கங்களுக்கு எங்ஙனம் பதிலளித்தான் என்பதை விளக்கும்.

வைதிகத்தின் பரிணாமம்; இந்து மதத்தின் மிக ஆதி காலத்தே (அதனை வைதிக அல்லது பிராம்மணிய காலம் எனலாம்) ஒருமித்த சமயம், வழிபாடு, மேலுலக வாசிகள் – யாவும் இருந்தன. கட்டாயமான வரலாற்றுக் காரணங்களால் பிறகு நடந்த மாறுதல்கள் தோன்றின. வைதிக ஆரியர்கள் கிழக்குக் கங்கை வெளிப்-பிரதேசத்தை அடைந்தபோது அவர்கள் அதுவரை கண்டிராத புதுவகை எதிர்ப்புக்கள் தோன்றின. அதுவரை அவர்கள் ஆதிக்குடி-களான பகைவர்களின் புரங்களையழித்து தாஸ்யுக்களைக் கீழ்ப்படுத்தி வென்று வந்தனர்.

இப்போது ஏற்பட்ட எதிர்ப்பு போர்முறை எதிர்ப்பன்று; இது கருத்து, தத்துவம் முதலிய அடிப்படைக் கருத்து வேறுபாடுகளின்பேரில் தோன்றியது. இதையும் வைதிகர்கள் ஒரு வகையாக எதிர்த்து வென்றனர் பணிந்து போய் வெல் அல்லது துணிந்து மாறி வெல் என்று இருவகைகள் உண்டு. வைதிகர்கள் இரண்டையும் செய்து பகுதி வெற்றியேனும் கண்டனர். இதெல்லாம் 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு கி.மு.வில் நிகழ்ந்தவை. வைதிகத்தில் ஓர் உட்புரட்சி நிகழ்ந்தது.

வைதிகம் இரு வழிகளைப் பின்பற்றிற்று. (1) மிகையான சடங்குகளைக் குறைத்துக் கோடல், (2) பௌராணிகக் கட்டுக்கதை (Mythology) களைப் புகுத்திப் பரப்புதல், இதிஹாஸ ஒழுக்க நெறியும், பக்தி உணர்ச்சிகள் தூண்டியும் புகுத்தப்பட்டன. பக்தியின் மிகப் பெரும் உரு கீதை என்னும் வைணவ நூல். கீதையின் உபதேசங் களால் தென் இந்திய பக்தி இயக்கம் தோன்றிற்று. கீதைக்கு உபநிடத அடிப்படையில் பொருள் கூறும் மரபு பிறந்தது.

இடைக்காலத்தில் வந்த ஆச்சாரியார்கள் என்னும் அறிஞர்கள் வாயிலாக இவ்வுரைகள் பரவின. அவர்கள் உரைகளில், நியாய (அளவை) இலக்கணம், தத்துவ, சாத்திரம், சமயத் தத்துவம் – யாவையும் சேர்ந்து வைதிகத்தை ஒரு இயற்பட இயங்கும், வெளிப்படையாகத் தோன்றும் சமயமாக மாற்றின. இவையெல்லாம் இடைக் காலத்திலேயே நிகழ்ந்து விட்டன.

பௌத்தத்தோடு மோதியபின் இவை மட்டும் நிகழ்ந்திருப்பின், நாம் இன்று காணும் இந்து மதம் உருவாகியிராது. யஜுர் வேதம், பிராம்மணம் ஆகியவற்றில் கூறியுள்ள சடங்குகள் விரிவாக்கப்பட்டு ஒன்று சேர்ந்து சிரௌத, கிருஹ்ய சூத்ரங்களில் சொல்லப்பட்ட பிராம்மணிய வாழ்க்கை நெறி யாஜ்ஞவல்க்யம், நாரதம், மனு முதலிய தர்மசாஸ்திரங்கள் வாயிலாக நிர்ணயிக்கப்பட்டன.

இம்மாறுதல்கள் யாவையுமே ஓர் உடலின் (நிணம்) தசை முதலிய உறுப்புக்கள்தாம்; அவற்றின் மூளை உபநிடதம்; பக்தி மார்க்கம் இதயம். மொத்த உடம்பும் சேர்ந்து விவரமாக இயல் சாதிமுறை ஏற்படுத்தப்பட்டது. அழிக்க முடியாத ஓர் ஒற்றுமையும், உள்ளூர உள்ள சமுதாயக் கூட்டுறவு, மிகுதியும் வேண்டப்பட்டது; நல்லொழுக்கம், ஆன்மிக உண்மைகள் மதக் கூறுபாடுகள் என்பவை தேவைப்பட்டன, இக்கட்டுக் கோப்பு வெற்றி பெற வேண்டுமாயின்.

சாதி முறை, சமய நெறிகள், ஆன்மிக இலக்குக்கள் என்பவற்றை இணைத்து அவ்வாரியர்கள் தாங்கள் விரும்பியதைச் சாதித்துக் கொண்டனர். உறுதியான மாறா நிலையை எய்த வேண்டுமாயின், சமுதாயக் குழுக்களிடையே சமூகப் போக்குவரத்துகளை இயல முடியாமற் செய்து விட வேண்டும். சாதி பிறப்பிலேயே உண்டாகிறது என்னும் கோட்பாட்டினை வைத்து மேற்கூறியதைச் சாதித்தனர்.

அந்நிலை கர்மா – கொள்கை, மறுபிறப்பு நம்பிக்கையாகியவற்றை ஏற்றல் வாயிலாக மேலும் வலிவுற்று சாதி அமைப்பில் பிரித்துக் காட்டும் மரபினை மேற்கொண்டு அதனை வலுப்படுத்தினர். சாதிக் கூட்டிற்குள் கூட்டுக் குடும்பம் அடை பட்டது. மேற்கூறிய யாவையும் சேர்ந்து தனியாருடைய சுதந்திர உள்நோக்கங்களையும், சமுதாய உறவுகளையும் நீக்கி, சமூகத்தில் அவனது இடத்தை முன்கூட்டியே தீர்மானித்து, அவனைப் பிறப்பு என்னும் விபத்தின் முடிவை அவனது தன்மை, முன்னேற்றம் யாவற்றிற்கும் காரணமாக்கின.

இஸ்லாமின் வெளிப்படையான, எளிய தாக்குதல்களை மேற்கொள்ளுவதற்குப் போதியவை மேற்கூறிய இந்து ஏற்பாடுகள் ஈந்தன. 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்து மதமும் இஸ்லாமும் ஒன்றையொன்று எதிர்த்தபோது அவற்றிடையே போதுமான இடைவெளி இருந்தது; ஒன்றினின்றொன்றைப் பார்த்தவுடனேயே எளிதிற் பிரித்துக் காணலாம்.

இந்து மதம் எஞ்சி நிற்க வேண்டுமாயின் அறிவு சான்ற அல்லது வளர்ச்சி மிக்க ஏற்பாடுகள் மட்டும் போதா என்பதையுணர்ந்த இந்துக்கள் சாதி முறையை மேலும் வலுப்படுத்தினர். அது மிகவும் நெருக்கமாக இறுகிய உறவின் முறை ஏற்பாடாக மாறிற்று; உப சாதிகள் புதிது புதிதாகத் தோன்றலாயின; நெருக்கமாயினும் விலகி நின்றனர். அவை ஸ்வஜாதி (சொந்த சாதி) மணங்களாலும் பிற கோத்ரமணங் களாலும் மலிந்தன.

ஸ்வஜாதி ஏற்பாட்டால், உள் சாதி மக்கட்தொகைப் பெருக்கம் (நாளடைவில் அத்தொகை, சுருங்குதற்குக் காரணமாகும் என்பதைப் புறக்கணித்து, உபசாதிகளிடையே உள்ள தூரத்தை நம்பியிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *