ஆசிரியர் பதில்கள்

ஜூலை 01-15

 

தவறான நிலைப்பாட்டை திருமா மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம், அவசரம்!

கே:    உலக அளவில் மகா மோசமான ஊழல் கட்சிகளில் பா.ஜ.வுக்கு, 4ஆவது இடம் என்று பி.பி.சி. ஆய்வு கூறுவது பற்றி தங்கள் கருத்து?

    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    இந்நாட்டு ஊடகங்கள் இப்படி பி.பி.சி. போன்று பல அரிய உண்மைகளை வெளியிடுவதில்லையே! இனியாவது “ஊழலற்ற சுத்த சுயம்பிரகாசங்கள்’’ என்ற பா.ஜ.க.வின் முகமூடி கழலட்டும்!

கே:    அரசு நியாய விலைக் கடைகளில் ஏழைகள் பெறும் அத்தியாவசியப் பொருட்களை நிறுத்தும் உள்நோக்கத்துடனே ரேஷன் கார்டை நீக்கிவிட்டு ஆதார் கார்டை அனைத்திற்கும் கட்டாயமாக்குகிறது மத்திய அரசு என்ற கருத்து சரியா?

    – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    பா.ஜ.க. எதிர்க்கட்சியிலிருந்துபோது ஆதார் அட்டைப் பயன்பாட்டைக் கடுமையாக எதிர்த்த இவர்கள் அடித்த ‘ஹி டர்ன்’ _ தலைகீழ் பல்டிக்கு இது ஒரு சான்று!

கே:    அ.இ.அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 அணிகளாகச் சிதறிக் கிடக்கின்றபோதிலும், “ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட விடமாட்டோம்’’ என்று கூறுவது எதைக் காட்டுகிறது?

    – கெ.நா.சாமி, சென்னை-72

ப:    ‘கொள்ளையடிப்பதில் எங்களுக்குள் சண்டை, அணி, பிணி வராது’ என்று கூறாது கூறுவதுபோல் இது உள்ளது!

கே:    ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளரையே ஆதரிப்போம்’ என்று அ.தி.முக.வினர் கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

    – கி.மாசிலாமணி, காஞ்சி

ப:    தமிழ்நாட்டு நலனை அடகுவைத்த-தோடு, தங்கள் கட்சியையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் அடகுவைக்கும் மானமற்ற கேலிக்கூத்து.

கே:    கலைஞர், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை இரஜினிகாந்த் நிரப்புவார் என்று திருமாவளவன் கூறலாமா?

    – கலையரசி, திட்டக்குடி

ப:    திருமாவுக்கு என்ன ஆயிற்று? இப்படிப்பட்ட தவறான நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வது அவசரம், அவசியம்.

கே:    பெரியாரின் தொண்டராய் தமிழர் தலைவராய், இரஜினிகாந்துக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

    – வே.கிருட்டிணமூர்த்தி, திருச்சி

ப:    அவருடைய உயரத்தை அவர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது நல்லது.

கே:    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொலைக் குற்றத்திற்காளான சங்கராச்சாரியை பணிந்து வணங்குவது பதவி நீட்டிப்பு பரிந்துரைக்காகவா?

    – ந.குணசேகரன், செங்கற்பட்டு

ப:    இனம் இனத்தோடு சேருகிறது! “கன்னியாகுமரி பார்ப்பனருக்குத் தேள் கொட்டினால், காஷ்மீரப் பார்ப்பனருக்கு நெறி கட்டும்’’ என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய அனுபவ மொழி என்பது புரிகிறதா?

கே:    பசுப் பாதுகாப்பிற்குத் தீவிரங்காட்டும் பி.ஜே.பி. அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாதது எதை உணர்த்துகிறது?

    – ப.சீதாலட்சுமி, தாம்பரம்

ப:    ‘மனிதர்களை மற, மாடுகளை நினை!’ இதுவே பா.ஜ.க. ஆட்சியின் திட்டம் என்ற உண்மையைக் காட்டுகிறது!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *