இந்திய கடற்படையில் இணைந்து பி.டெக். படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். படித்து முடித்ததும் இந்திய கடற்படையில் ரூ.72 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.
கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாதெமியில் பி.டெக். படித்து கடற்படையில் பணியில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டு தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் டூ வகுப்பில், ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
பிளஸ் டூ படித்துவிட்டு ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். அவர்-களது அகில இந்திய ரேங்க் அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
1998ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி-யிலிருந்து 2001ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். குறைந்த-பட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். பார்வைத் திறன் குறைபாடுகள் இருக்கக் கூடாது. உடலில் பச்சை குத்தி இருக்கக் கூடாது.
மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி வாய்ந்த மாணவர்கள் எழுந்து மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதல் கட்டத் தேர்வில் இன்டலிஜென்ஸ், பிக்ச்சர் பெர்சப்ஷன் ஆகியவை குறித்த தேர்வும் குழு கலந்தாய்வும் இருக்கும்.
இரண்டாம் கட்டத் தேர்வில் உளவியல் தேர்வு, குரூப் டெஸ்டிங் ஆகிய-வற்றுடன் நேர்முகத் தேர்வு இருக்கும். இவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
இதில் தகுதி பெறும் மாணவர்கள், கேரளத்தில் உள்ள எழிமலா கடற்படை அகாதெமியில் பி.டெக். அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் அல்லது பி.டெக். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (நேவல் ஆர்க்கிடெக்ட் சிறப்புப் பாடம் உள்பட), எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்-கேஷன் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
படிப்புக் கட்டணம், உணவுக் கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்-களுக்கு இலவசம். வெற்றிகரமாக படிப்பினை முடித்தவர்களுக்கு, தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக். பட்டத்தை வழங்கும்.
படிப்பினை வெற்றிகரமாக முடித்தவர்-களுக்கு, கடற்படையில் சப் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணி வழங்கப்படும். அதாவது, தொடக்க நிலையில் ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.81 ஆயிரம் வரை ஊதியமும் மற்ற சலுகைகளும் கிடைக்கும்.
இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 25.7.2017
விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in