நாசாவிலுள்ள விஞ்ஞானிகள் அவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய உயிரினத்துக்கு (Organism) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஒரு முன்னோடி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் பெயரைச் சூட்டியுள்ளனர்.
இது ஒரு வகை பாக்டீரியா போன்றதாகும். இது சர்வதேச விண் ஆய்வு நிலையத்தில் மட்டுமே (International Space Statium) காணப் படுவதாகும்.
பூமியில் காணப்படுவதில்லை. ஜெட் பாப்புலிசம் லாபராட்டெரி என்ற அமைப்பு கோள்களுக்கிடையேயான பயணங்களில் செயல்படுகிறது. (Work on Inter planetary travel) இந்தப் புதிய பாக்டீரியாவை சர்வதேச விண் ஆய்வு நிலையத்தின் வடிகட்டிகளில் (Filters) கண்டு இதற்கு (Solibacillus Kalamini) சோலிபேசிலஸ் கலாமி என்று பெயரிட்டுக் கலாமைப் பெருமைப் படுத்தியுள்ளனர்.
– டெக்கான் கிரோனிக்கல், 22.5.2013