உலர் பழங்களும், பருப்புகளும் நாம் நாள்தோறும் சாப்பிட வேண்டும். ஆனால், நிறையப் பேர் அவற்றைச் சாப்பிட்டால் உடம்பு எடை கூடும் என்று அஞ்சுகின்றனர். ஆனால், முறைப்படி அளவோடு சாப்பிட்டால் அழகாக, ஆரோக்கியமாக, எந்த நோய்நொடியும் இல்லாமல் வாழலாம் என்பதுதான் உண்மை.
உலர் பழங்களில் விட்டமின் ‘சி’, ‘ஏ’, மற்றும் ‘பி காம்ப்ளக்ஸ்’ சத்துக்கள் அதிகம். ஆனா, டிரை ஃபுரூட்ஸில் கொழுப்பு கிடையாது. சோடியமும் குறைச்சல். இது குறைச்சலா இருந்தா இதயத்துக்கு நல்லது.
உலர் பருப்புகளில் உலர்ந்ததனால் அவற்றில் மருத்துவ குணங்கள் இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்த இரண்டிலும் தாது உப்புகளும் விட்டமின்களும் அதிகம் இருப்பதால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
இதனால் உடல் எடை கூடுமா?
சுகர் சிரப், கார்ன் சிரப்ல புரட்டி எடுத்த நட்ஸையும் டிரை ஃபுருட்ஸையும் சாப்பிட்டால்தான் எடை கூடும்.
இவற்றை வாங்குறப்போ லேபிள்ல ‘நோ சல்பைடு’ன்னு இருக்கான்னு பார்த்து வாங்குங்க. அதில்தான் பதப்படுத்துற கெமிக்கல்களும் செயற்கை நிறமும் இருக்காது.
எல்லா வகை உலர் பருப்புகளும் மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பும் பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்பும் இருக்கிறதால, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். அதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இந்தப் பலன்கள், பருப்புகளை நீங்கள் எண்ணெயிலோ, நெய்யிலோ பொரித்து சாப்பிட்டால் கிடைக்காது என்பதோடு பெருங்கேடு தரும்.
முந்திரி: முந்திரிப் பருப்பு கேன்சர் வராம தடுக்கும். ஈறுகளை வலிமையாக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். சிலருக்கு அடித் தொண்டையில் வறட்சி இருக்கும். அந்தப் பிரச்சினை முந்திரி சாப்பிட்டால் சரியாகிவிடும். இதயப் படபடப்பை சரிசெய்கிற மெக்னீசியம், முந்திரியில் நிறைய இருக்கிறது. நல்ல தூக்கம் வரும். கெண்டைக்கால் தசைப்பிடிப்பு போகும். மூட்டுவலி வராது, எலும்பு உறுதியாகும். எல்லாவற்றையும்விட, தினம் நாலு முந்திரி சாப்பிட்டுக்கிட்டு வந்தால், மாதவிடாய் சமயத்தில் வருகிற கால்சியம் குறைபாடு வரவே வராது. வயசாகறதையும் தள்ளிப் போடும்.
முந்திரியில் மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால், இதயத்துக்கு நல்லது. நம் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை குறைத்து, மாரடைப்பு வராமல் காக்கும். ஆனால், நெய்யில் வறுத்த, கடையில விற்கிற சால்ட்டட் முந்திரியை சாப்பிட்டால், மேலே சொன்ன பலன்களும் கிடைக்காது என்பதோடு இதயத்துக்கும் கேடு.
வால்நாட்: வால்நட்டில் இருக்கின்ற Linoleic Acid இதயத்தைப் பாதுகாக்கும், உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்கிடும். முகத்தில் சுருக்கத்தை வரவிடாது. மூளைக்குத் தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதில் நிறைய இருப்பதால் ஞாபக சக்தி குறையுற பிரச்சினை வராது.
பாதாம்: பாதாம், நம் உடலில் இருக்கின்ற அத்தனை உறுப்புகளையும் பாதுகாக்கும். புதிய ரத்த செல்களை உருவாக்கும். ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்கும். முகப்பரு வராது. முகப்பருவால் வந்த தழும்புகளும் சரியாகும்.
கேன்சரின் பரம எதிரி பாதாம். நுரையீரல் கேன்சர், பிராஸ்ட்டேட் கேன்சர், பிரெஸ்ட் கேன்சர் மூன்றையும் வரவிடாது. இதில் இருக்கின்ற ஃபிளேவனாய்டு, பிரெஸ்ட் கேன்சர் வந்தவங்களுக்கும் கேன்சர் செல்களை வளர விடாமல் தடுக்கும்.
பாதாமோட தோலில் இருக்கின்ற Tannins Phytates ஜீரண சக்தியை குறைத்துவிடும். ஆனால், பாதாமை ஊற வைச்சா, அதில்இருந்து ‘லிபேஸ்’ங்கிற நொதி ஒன்று வெளிப்படும். இது ஜீரணம் சீராக நடக்க உதவி செய்யும். அதனால்தான், பாதாமை ஊற வைத்து, தோலை நீக்கிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
மேலும், ஊற வைத்தால் பாதாமில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகமாகும். அதனால் ரத்த அழுத்தம் சீராகி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது ரத்தத்தில் இருக்கிற சர்க்கரையோட அளவையும் கட்டுப்படுத்தும்.
ஊற வைத்த பாதாமில் கேன்சர்ல இருந்து நம்மை காக்கிற விட்டமின் ‘பி 17’ அதிகமாகும்.
கர்ப்பிணிகள் சாப்பிட்டால், உடலில் ஃபோலிக் ஆசிட் அதிகமாகும். பிறவிக் குறைபாடு இல்லாமல் ஒரு குழந்தை பிறப்பதற்கு இந்த சத்து மிகவும் தேவை.
பிஸ்தா: பிஸ்தாவில் இருக்கின்ற ‘பினோலிக்’ அப்படிங்கிற ஆன்டி ஆக்ஸிடென்ட், மூளைக்கு நல்லது.
முக்கியமா, மன அழுத்தத்தைப் போக்கும்.
உலர் திராட்சை: இது சிறந்த மலமிளக்கி. விட்டமின் ‘ஏ’ நிறைய இருப்பதால் கண்களுக்கு நல்லது. பல் சொத்தை வராது. இரும்புச்சத்து நிறைய இருப்பதால் அனீமிக்கா இருப்பவர்கள் நிறையச் சாப்பிடலாம். இதய படபடப்பைப் போக்கும். இதில் இருக்கின்ற Resveratrol என்றும் உங்களை இளமையாகவே வைத்திருக்கும்.
கேன்சரின் எதிரியான விட்டமின் பி 17
நம் உடலில் Rhodanese என்கிற ஒரு என்சைம், உடல் முழுக்க இருக்கும். ஆனால், கேன்சர் செல்கள் இருக்கும் இடத்தில் மட்டும் இருக்காது. அதற்குப் பதிலாக Beta Glucose Cider இருக்கும். இந்தச் சமயத்தில் உங்கள் உடலுக்குள் விட்டமின் பி 17 போனால், அதைச் சுக்கு நூறாக்கி நல்ல வளமான செல்களை அங்கு
உருவாக்கும். நொறுங்கிய Beta Glucose Cider சிறுநீரில் போய்விடும்.
எல்லா உலர் பருப்பிலும் விட்டமின் பி 17 இருக்கிறது. குறிப்பாக, Bitter Almonds மற்றும் வால்நட்டில் மிக அதிகம்.