கவிதை

டிசம்பர் 01-15

 

பெரியாரின் இதயக்கனி – கி.வீரமணி

        பெரியாரின்
        இதயத்தில்
        விழுந்தது ஒரு கனி
        அவர்தாம்
        நம் அய்யா வீரமணி!

        அவருக்கு திராவிட
        கொள்கைகள் மீது நாட்டம்
        அதனால் தமிழ்நாட்டில்
        ஏற்பட்டது பல மாற்றம்
        இதனால் தமிழர்களுக்கு
        என்றுமே ஏற்றம்!

        தமிழர் நலன் காக்க
        எப்பொழுதும்
        உழைப்பார்!
        அவரைத் தமிழர் தலைவர்
        என்று அனைவரும்
        அழைப்பார்!
        காமசாமியார்களை
        களையெடுத்து
        அறிவை விதைத்தார்
        நம் வீரமணியார்!

        உண்மை (இதழ்)
        மூலம் கொள்கைகளை
        உரைப்பார்!
        மூடநம்பிக்கைகளை
        தன் பேச்சால்
        கரைப்பார்!
        இன்றைய
        இளைஞர் பலரின்
        காதலோ ஒருதலை!
        வீரமணி
        விரும்பி ஏற்ற
        காதலோ விடுதலை (இதழ்)!

        பெரியாரின் கொள்கையே
        அவரின் உயிர்நாடி!
        பெரும்பகை வரினும்
        அழிப்பார்
        விரைந்தோடி!

        அன்னை மணியம்மையின்
        அருமைப் பிள்ளை!
        அய்யா மொழிகளைப்
        பேசிடும் கிள்ளை!
        ஆரியம் எதிர்க்கும்
        அயராப் பணி
        அடைந்த பெயரே
        வீரமணி!

– உதயபாரதி

 


 

 

தந்தை பெரியார் வழியில்
தன்மானப் போரிடும் வீரமணி!
பாலைவனத்தில் பசுமையுண்டோ
பாரதச் சாம்பலில் ஈரமுண்டோ?
நாலு வருணத்து வேற்றுமையால்
நல்ல புதுமைகள் பூத்திடுமோ?
எந்த விதத்திலும் ஏற்றமில்லை
எப்போதும் தீமையே! மாற்றமில்லை!
சீர்மையும் நேர்மையும் சேரவில்லை!

எத்தனை எத்தனை மோசடிகள்
எங்கெங்கும் எப்போதும் நாசங்கள்!
சுத்தம் அறியா சாக்கடைகள்
சுயநலம் அழியா போக்கிரிகள்!
தேர்தலே திருடர்கள் திருவிழாவாய்த்
திகழ்வதைக் காண்கிறோம் சீரழிவே!

மூச்செல்லாம் பேச்செல்லாம் மோசடியே
வீச்செல்லாம் சுரண்டலின் பாசறையே!
சட்டங்கள் திட்டங்கள் சாய்ந்திடுதே!
சதியாலே நெறியாவும் மாய்ந்திடுதே!
நாணத்தால் நல்லோர்கள் கூம்புகின்றார்
மானத்தால் வாழ்வோர்கள் ஏங்குகின்றார்!

மானமும் அறிவும் மானிடர்க் கழகென
ஞானப் பெரியார் நாளும் அறைந்தார்
ஈனப் பிழைப்பில் இழிவில் கிடந்தோர்
ஏற்றம் பெறவே உழைத்திட்டார்!

தந்தை பெரியார் அடியொற்றி
மந்தை மனிதர் மானம்பெற
சொந்த வாழ்க்கை அறமறந்து
முந்தி உழைப்பவர் வீரமணி!

– வெள்ளையாம்பட்டு சுந்தரம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *