கேள்வி : இது இந்துக்கள் நாடு, இங்கு இருக்கும் காடும் மலையும் இந்துக் கடவுளுக்குச் சொந்தம் என்று ஈஷா யோகா மய்யத்தில், பெயர் கூறத் தகுதியற்ற ஒரு பி.ஜே.பி செயலர் சொல்லியுள்ளது பற்றி…
– சொர்ணம், ஊற்றங்கரை
பதில் : மூளைச்சாயமேற்றி மனித உரிமை-களைக் கொச்சைப்படுத்தும் ஈஷா மய்யம் என்ற ஊழல்மிக்க இடத்தில் இத்தகைய எச்சிலைப் பேச்சுகள்தானே வரும்? சாக்கடை-களிடம் சந்தன மணத்தை எதிர்பார்க்கலாமா?
கேள்வி: ‘என்.எல்.சி இன்டியா’ என்று நுழைப்பதன் உள்நோக்கம் என்ன?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : தமிழ் உணர்வை அழிக்க, அதன் தலைமையான ஒடிசா பார்ப்பனரும், அவருக்குப் பின்புலமாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் திடீர் தேசபக்த திலகங்களாகி, அடாவடி ஆரியத்தனத்தால் நெய்வேலி என்ற வரலாற்றுப் பெயரை மறைக்க முயலுவதேயாகும்.
சிங்கரேணி நிலக்கரி சுரங்கம், பொக்காரோ ஸ்டீல் பிளாண்ட் _ இவை உள்ளனவே.
சேலம் இரும்பாலைக்கு இதே வகை ஆபத்து வரக்கூடும். எச்சரிக்கையாய் திருந்தட்டும்.
கேள்வி: நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி தலித்தை தாக்குவதற்குப் பதில் தன்னைத் தாக்கச் சொல்வது தந்திரம்தானே?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : கையில் _ ஆட்சியில் _ பலம் வாய்ந்த இராணுவத்தையும், ஆட்சி _ அதிகாரத்தை வைத்துக்கொண்டுள்ள பிரதமர் இப்படிப் பேசுவது எவ்வகையில் ஏற்கப்படும்! நீலிக் கண்ணீரை நிஜக்கண்ணீர் என்று ஏமாறலாமா?
கேள்வி: ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கம்கூட வெல்ல முடியாமைக்கு காரணம் என்ன? தீர்வு என்ன?
– சீத்தாபதி, தாம்பரம்
பதில் : பார்ப்பன விளையாட்டாகியுள்ள ‘கிரிக்கெட்’ போன்றவற்றிக்குக் கொடுக்கும் எல்லையற்ற ஆதரவு, விளையாட்டில் அரசியல், பலவகை ஓரவஞ்சனைப் பார்வை _ இவைகள் எல்லாம்தான் காரணம். துரோணாச்-சாரிகளை குருவாகக் கொண்டால் கட்டை விரல்தானே காணிக்கை-யாகத் தரவேண்டும். அதனால்தான் இந்த வரலாற்றுத் தோல்வி!
கேள்வி: பல தலைவர்கள் பழித்தும் இழித்தும் பேசும் அளவிற்கு அமைந்த மோடி-யின் விடுதலை நாள் உரை பற்றி தங்கள் கருத்து என்ன?
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
பதில் : தாக்கத்தை ஏற்படுத்தாத தாக்குதல் உரை அவ்வளவுதான்!
கேள்வி: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திவரும் ஆரிய பார்ப்பனர்-களிடம் விடுதலை பெறாமல், ஆங்கிலேயர் அளித்த விடுதலையை கொண்டாடுவது அறியாமை-யல்லவா?
– கு.நா.இராமண்ணா, சீர்காழி
பதில் : இன்னும் இங்குள்ள “சூத்திர, பஞ்சம, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களைக் கொண்ட அடிமைத் தனத்தில் அற்புத சுகம் காணும் சமூகத்திற்குப் புரியவில்லையே! சிலருக்குப் பதவிச் சபலம். அவ்வளவுதான்!
“பொத்தல் இலைக் கலமானார் ஏழை-மக்கள், புனல் நிறைந்த தொட்டி-யானார் செல்வர்’’ _ இதுதான் உண்மை நிலை!
கேள்வி: புதிய கல்விக் கொள்கை குறித்து அரசியல்வாதிகள் கடமைகளாக எவற்றை வலியுறுத்துகிறீர்கள்?
– கெ.நா.சாமி, சென்னை
பதில் : பல அரசியல்வாதிகளுக்கு அக்கொள்கைபற்றி படிக்கவே நேரமோ, மனமோ இல்லையே. பிறகு என்ன அவர்களைப் பற்றி சொல்ல-விருக்கிறது?
கேள்வி: அ.தி.மு.க. செய்யும் தவறுகளை தனித்து விமர்சிக்காது, தி.மு.க.வையும் இணைத்து பழி சுமத்துவது பார்ப்பன நரித்தனம்தானே?
– வேல்விழி, ஈரோடு-2
பதில் : ‘நரித்தனம் என்றாலே பாசாங்கு’ என்றுதானே பொருள்?
கேள்வி: வடமாநிலத்துக்காரர்கள், பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமை-யாக்கி, தங்கள் வணிகத்தைப் பெருக்க முயலுவதை ஒடுக்க, தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?
– ந.வீரச்செல்வி, கோவை
பதில் : முதலில் இதற்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகள், காவல்துறை, மாணவர்களை போதைப் பொருள் விற்கத் தூண்டும் சுரண்டல் பேர்வழி-களைக் கண்டுபிடித்து கடும் தண்டனைக்கு உள்ளாக்கிட வேண்டும்.
நுண்ணறிவுப் பிரிவு இதனைத் துல்லியமாகக் கண்டறிந்து, களை-யெடுத்தல் அவசரம், அவசியம்!