சிங்கப்பூரில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் படிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு படித்த இந்திய மாணவர்களுக்கு எஸ்அய்ஏ யூத் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை ஆண்டுதோறும் புதுப்பிக்கப்-படும்.
இதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள், இந்த ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வை முடித்திருப்பதோடு 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முதல் மொழியாக ஆங்கிலத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். 1998ஆம் ஆண்டுக்கும் 2000ஆவது ஆண்டுக்கும் இடையே பிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்தக் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வும் நேர்காணலும் தில்லியில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சிங்கப்பூர் படிக்கச் செல்ல வேண்டியிருக்கும்.
ஆன்லைன் மூலம் ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை இணைக்க வேண்டாம்.
விவரங்களுக்கு:
https://www/moe/gov/sg/admissions/scholarships/sia#sthash.Ly4AfgZG
தொடர்புக்கு: +65 6372 2220