புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன்
எழுதிய India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
அக்கால இந்தியாவின் ‘ராணுவ’ ஆட்சியாளர்கள் பல்வேறு நாடுகளையும் மக்களையும் வென்று அடிமைப்படுத்தினார்கள். மிகக் கொடுமையான அடக்கு முறைகளை அவர்கள் மீது ஏவி அவர்களைத் துன்புறுத்-தினார்கள். அவர்களின் மத உரிமைகளைப் பறித்துக் கொண்டார்கள்; அவர்களும் மனிதர்களே என்ற பொதுவான இரக்க உணர்வுகூட இல்லாமல் அவர்களை மனிதர்களாகவே நடத்தவில்லை. தற்போது இந்தியா, வேதகாலம் தொடங்கித் தொடர்ந்து வளர்ந்துகொண்டு வருகின்ற தீமைகளின் உச்சநிலையில் இருக்கின்றதெனினும், அவற்றை அழிக்க முடியவில்லை என்றாலும், அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. அது இப்போது ஒன்றிணைந்திருக்-கிறது. ஒரு பகுதி விருப்பத்தின் பேரிலும் மறுபகுதி வெற்றிகொண்ட முறையிலும் உலகின் அறிவாற்றல் மிகுந்த _ மனிதர்களை நேசிக்கின்ற _ கொடைக் குணமுள்ள நாடாக அது மாறியிருக்கிறது. ஓராண்டுக்கு முன்னர், ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இது தொடர்பான நன்மைகளை என்னால் நன்கு உணர முடிந்தது.
“இதன் விளைவு என்னவெனில், வன்முறையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் இந்தியா விடுதலை பெற்றதுதான்; சில மாவட்டங்-களைத் தவிர; இந்தியா _ அதன் பின்னர் அமைதி, சட்டம் _ ஒழுங்கு, மத உரிமைகள், வாழ்த்துக்கள் ஆகியவற்றுடன் முன் எப்போதும், எந்த அரச மரபினரின் ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு அனுபவித்து மகிழ்ந்து வருகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளையும், இடர்பாடுகளையும் பொருட்படுத்தாது, இந்தியாவைத் தன் அன்பினாலும், தாய்மைத் தழுவுதலோடும் பிரிட்டன் அரவணைத்துத் தன் அன்பான வாழ்த்துக்களை வழங்குகிறது; எதற்காக இந்தியா கடுமுயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த அமைதியைப் பெறுவதற்கு நாம் வாழ்த்துகிறோம். தன் சுமைகளைக் குறைப்பதற்காகவும் சரிசெய்து கொள்வதற்காககவும் இந்தியா கடின உழைப்பை மேற்கொண்டிருக்கிறது; தன் வேளாண்மை வளங்களைப் பெருக்குவதற்காக பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளோடு வணிக உறவை வளர்த்துக்கொள்வதற்காகப் பரந்து கிடக்கின்ற கடற்பரப்பில்அமைதியான வழிகளை அது தன் கப்பல்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாவட்டத்தோடு மாவட்டத்-தையும், மாநிலத்தோடு மாநிலத்தையும், சாலை வழியாகவும், பாலங்களின் வழியாகவும் மலைகளை அகழ்ந்து கணவாய்களின் வழியாகவும் அனைத்தையும் இந்தியா இணைத்திருக்கிறது. நீர் வழியாகவும், வான் வழியாகவும், தரைவழியாகவும், கடல் வழியாகவும் தகவல் தொடர்புகளை இந்தியா ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு இந்தியக் குடிமக்கள் வியப்படைந்து நிற்கிறார்கள். மனிதகுல வளர்ச்சியில் தன் இனமரபுக் குடிமக்களையும் வளர்ச்சியை நோக்கி உயர்த்துவதற்கு இந்தியா முயன்று கொண்டிருக்கிறது.
ஓர் அறிவிழந்த மகன், உயிரோடுள்ள _ இறந்துபோன தன் பெற்றோருக்குச் சேர்த்து நெருப்-பிடுபவன் கைகளைக் கட்டிப்போடுவது போல, ஜாதி உணர்வால், தன் குலப்-பெருமையைக் காப்பாற்றக் கொடூரமான முறையில் பெண் குழந்தையைக் கொலை செய்யத் துடிக்கும் பெற்றோரின் கைகள் கைது செய்யப்பட்டுள்ளன. தவறான வழிகாட்டுதலுக்-குள்ளாகி, துன்பத்திற்குட்பட்டுத் தன் சொந்த வாழ்க்கையை அழித்துக் கொள்ள முற்பட்டவன் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறான். கடவுளர்-களுக்கும், பேய் பூதங்களுக்கும், மனித ரத்தத்தையும் மனித இறைச்சியையும் படைக்கும் பழக்கத்தையும், மது வகைகளைப் படைத்து வழிபடுதலையும் இந்தியா ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. நாடு முழுக்க நேர்மையான நீதிமுறை கிடைப்பதற்கு அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காலந்தோறும் தனது ஆட்சிமுறையை _ நிர்வாகத்தை மேம்படுத்திக் கொண்டு வருகின்றது. கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி, தன் எல்லைப் பகுதிகளில் உண்மையையும் நம்பிக்கையையும் பரப்புவதில் அது கடைப்பிடித்துவரும் நடைமுறையும் முன் எப்போதும் இல்லாத அளவிற்குச் சிறந்து விளங்குகிறது; அவற்றில் மிகுந்த கவனத்துடன் அது இருக்கிறது.’’
பிரிட்டானிய இந்தியாவின் வரலாற்றுப் பதிவேடுகளில் கடந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இந்தியக் குடிமக்களில் ஒரு பகுதியினர், மாபெரும் பழியுடன் கூடிய கொடுமைத்தன்மையுடன், தங்களுக்கு நன்மை செய்து ஆதரித்தவர்களையே அழிப்பதற்கு முற்பட்டார்கள். இங்கே நான் பயன்படுத்திய கடினமான சொற்களை மாற்றிக் கொள்ளவா? இல்லை! இந்த நிகழ்ச்சிகளின் பொதுவான தன்மையுடன் அவற்றை உற்றுநோக்கும்போது, இறைப்பற்றுமிக்க ஒப்புதலுடன் _நல்வாய்ப்பான நீதிமுறை வழங்குவது என்பது இன்னும் புகழ்வாய்ந்த ஒரு செயலைக் கருதியேயாகும். பிரிட்டானியர்களாகிய நமக்குக் கடந்த கால நிகழ்வுகள், நம்மைச் சுற்றியிருந்த சமூகவியல் சூழல்களைப் புரிந்துகொள்வதில் நாம் செய்த தவறுகளை நமக்கு வெளிப்படுத்திக் காட்டு-கின்றன; அத்துடன் நமக்கும் அவற்றுக்கும் இடையே தொடர்புண்டாக்கி அவற்றை எதிர்கொள்ள வைத்தவர்களினால் நமக்கு ஏற்பட்ட குறைபாடுகளையும் அவை உணர்த்துகின்றன. ஆனால், அவை நம்முடைய இரக்க மனப்பான்மையையும், நற்செயல் விருப்பத்தையும், அன்புதவிகளையும் விரைவு-படுத்தி விட்டனவே தவிர அழித்துவிட-வில்லை; மேலும் இந்தியாவின் மேம்பாட்டிற்காக நாம் உழைக்க வேண்டும் என்ற நம் உறுதிப்-பாட்டிற்கு அவை வலிமை சேர்ந்திருக்கின்றன-வேயன்றி நம் உறுதியைக் குலைத்துவிடவில்லை. அத்துடன் பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டானியப் பேரரசின் உலைவில்லா நிலைத்த தன்மைக்கு அவை உரம் சேர்ப்பனவாக அமைந்துவிட்டன. இனிமேல், வளர்ந்துவரும் இந்தியாவின் அறிவுத்திறன், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடவுளின் பார்வைக்குக் கீழ் உள்ள நமது வலிமையை _ ஆற்றல் மிகுந்த அதிகாரத்தை உணர்ந்துகொள்ளும்; நம்முடைய அரசியல் அதிகாரம் பரந்து விரிந்துள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் நாம் வழங்கும் நல்வாழ்த்துக்களை அது பாராட்டும். பிரிட்டானியப் பேரரசு இங்கு, பரிவுடனும் இரக்க உணர்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் இன்னும் இருக்கிறது. படைவீரன் இங்கே இருக்கிறான்; அமைதியையும் சட்டம் _ ஒழுங்கையும் நிலைநிறுத்துவதற்காக அவன் போராடிக் கொண்டிருக்கிறான்;
போர் செய்வதற்காகவோ கொள்ளையடிப்-பதற்காகவோ அவன், இங்கு நிற்கவில்லை; நம் ஆட்சியாளன் (நிர்வாகி) இங்கு இருக்கிறான்; பொதுமக்களின் வாழ்க்கையை முன்னேற்று-வதற்காகவும் நேர்மையான நீதி முறையை இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காகவும் அவன் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான்; வணிகன் இங்கே இருக்கிறான்; விளை-பொருட்களைக் கொடுத்து அதற்கு மாற்றாக அவன் பெற முடியாததைப் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து அவன் பெற்றுக் கொள்கிறான். பொறியாளர் இங்கே இருக்கிறார்; இயற்கையின் நுட்பங்களோடு இணைந்து, அதனால் வழிகாட்டப்பெற்று, நல்வாய்ப்புடன் கலை, அறிவியல் ஆகியவற்றின் உதவி ஆதாரங்களோடு, மதிப்பிடற்கரிய பொதுப் பணிகளை அவர் வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறார்; மக்களின் பயன்-பாட்டிற்கு அவை பேருதவியாக உள்ளன; இந்த நிறுவனத்தின் தலைவர் நமக்கு இங்கே காட்டியுள்ள கலையழகு மிகுந்த கட்டடங்-களைப்-போல! கல்வித்துறை _ ஊடகத்துறை சார்ந்த கல்வியாளர் இங்கே இருக்கிறார்; மதச்சார்பற்ற கல்வியையும் அது தொடர்பான துணைக் கருவிகளையும் _ உலகில் முன்னேறியிருக்கின்ற பல நாடுகள் பெற்றிருக்-கின்ற அறிவு நுணுக்கங்களையும் அவர் இங்கே வழங்கி வருகிறார்.
– நிறைவு